71 வயதில் 35 வயது பெண்ணை திருமணம் செய்த அதிமுக எம்பி!

சற்றுமுன்

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அன்வர் ராஜா. இவருக்கு வயது 71. தற்போது அவர் வட மாநிலத்தை சேர்ந்த குர்ஷித்பானு என்ற 35 வயது பெண்ணை இவர் திருமணம் செய்துள்ளார். இது அன்வர் ராஜாவுக்கு மூன்றாவது திருமணமாகும்.

ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளத்தை சேர்ந்தவர் அன்வர் ராஜா. முன்னாள் தமிழக அமைச்சராக இருந்த அவர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதிமுக சிறுபான்மைப் பிரிவு மாநில செயலாளராகவும் உள்ளார்.

இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தாஜிதா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். கடந்த ஆண்டு தாஜிதா இறந்து போனார். இந்நிலையில் அன்வர் ராஜா நேற்று வடமாநிலத்தை சேர்ந்த குர்ஷித்பானு என்ற 35 வயது பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்தார்.

அன்வர் ராஜாவுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். எளிமையாக நடைபெற்ற அவரின் மூன்றாவது திருமணத்திற்கு, மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.