இன்று… ஐப்பசி துலா ஸ்நானம்!

cauvery-pooja
cauvery-pooja

ஐப்பசி முதல் தேதியன்று காவேரி நதியில் நீராடுவதை
துலா ஸ்நானம் என்பர்…

துலா மாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும், பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எம வேதனையின்றி முக்தியும் கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஜோதிடவியலைப் பொறுத்தவரை ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் துலா மாதம் என்றும் இம்மாதம் அழைக்கப்படுகிறது…

துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும்.

அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். அதனால்தான் “”உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன””…

துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள்.

காவேரியில் துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதரை வழிபட்டதன் பலனாக சந்தனு மகாராஜா பீஷ்மரை புத்திரனாக அடைந்தார்..

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

அர்ச்சுனன், துலா ஸ்நானம் செய்து ஸ்ரீரங்கநாதப் பெருமாளை துதித்து சுபத்ராவை மணம் புரிந்தான் என்று புராணம் கூறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்காதேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்பது புராணம்.

தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரிக்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கலியாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன.

தலைக்காவேரி, ராமபுரம், ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, திருவானைக்காவல், சப்தஸ்தானம், திருவையாறு, புஷ்பாரண்யம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலா மாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

ஐப்பசி முதல் தேதி திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது நீராடலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும், கடைசி தேதியன்று மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் முழுக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம்…

  • ஜெயஸ்ரீ
ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Topics

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories