50ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ‘துக்ளக்’

Published:

thuglak - 2026

துக்ளக் இன்று தனது 50 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது… “துக்ளக்” பத்திரிக்கை குடும்பத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

துக்ளக் பத்திரிக்கையின், வாசகராக இருந்ததில் பெருமை தக்க அம்சமாக நாம் கருதுவது மற்ற பத்திரிக்கைகளில்,இல்லாத அதன் தனித்தன்மை மட்டுமே.

பலருடைய பொதுவாழ்வுப் பிரச்னைகளைக் கிண்டல் செய்து, கண்டித்து, விமர்சித்துள்ள துக்ளக் , எந்த ஒரு தனி மனிதருடைய தனி வாழ்வையும், எள்ளளவும் கூட விமர்சித்ததே கிடையாது.

இலவச இணைப்பாக மந்திரத்த தகடு,சோப்பு,சீப்பு போன்ற வேண்டாத குப்பைகளை நம் தலையில் கட்டாயமாக திணிக்காத பத்திரிக்கை துக்ளக்..

துக்ளக் மற்றும் அதன் ஆசிரியர் மீதான எதிர் கருத்துக்களை மிக தாரளமாக துக்ளக் பத்திரிக்கையிலேயே சொல்ல அனுமதிக்கும் அனுமதித்த பத்திரிக்கை துக்ளக்.

கடந்த 50 ஆண்டுகளில் தீவிரவாத இயக்கங்களை கடுமையாக எதிர்த்தும் அவற்றைப் பற்றி தனது கருத்துக்களை மிக தைரியமாய் எழுதியும் வருகிறது துக்ளக்.

. தீவிரவாதிகளும்,பிரிவினைவாதிகளையும் அவர்களின் தர்க்கங்களில் எள்ளளவு நியாயமிருந்தாலும், பாதை மோசமானது என்று சொல்லி துளியும் இரக்கம் காட்டாமல் எதிர்த்து வரும் பத்திரிக்கைகளில் துக்ளக்,மிக முக்கியமான பத்திரிக்கை,.

ALSO READ:  கல்வி அமைச்சரின் ராஜினாமா - மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

சோ அவர்களின் பல கருத்துக்களில் பலருக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, தமிழகத்தில் அரசியலுக்கென்றே நடந்து வரும் பத்திரிக்கையில் கண்ணியமாகவும், வியாபார நோக்கத்திற்காக சமரசங்கள் செய்யாமலும் நடந்து வந்த ஒரே தரமான பத்திரிக்கை ‘துக்ளக்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது…

என்றும் சொல்வோம் துக்ளக் வாசகராக இருப்பதில் இருந்ததில் பெருமிதம் என…

50 ஆண்டு தொட்ட துக்ளக் மற்றும் சோ அவர்களின் மிக பெரிய வெற்றியாக நாம் கருதுவது ஆதரவாளராக இருந்தாலும் சரி எதிர்ப்பாளாராக இருந்தாலும் சரி இன்றை அரசியல் சூழ்நிலையில் “ இப்ப மட்டும் சோ இருந்திருந்தா “ என ஒவ்வோருவரையும் நினைக்க வைத்திருப்பதே அவரின் மிக பெரிய வெற்றி தான்..

எப்படியும் சோ அவர்கள் துக்ளக் 50 ம் ஆண்டு விழா கொண்டாடி விடுவார் என ஆவலுடன் இருந்தோம்..ஆனால் இறைவன் திருவுள்ளம் வேறாக இருக்கும் போது நாம் என்ன செய்ய…ஆனால் ஆறுதல் ..சோ அவர்கள் நம்மை விட்டு மறைந்தாலும் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்ட, அவரின் வாசகர்கள் என்ற பல விதைகளை விதைத்து விட்டே சென்றுள்ளார்..அவரின் எழுத்துக்களும் பேச்சும் அடுத்த 50 ஆண்டுகள் கடந்தும் நம்மை வழி நடத்தும் என்ற நம்பிக்கை நிச்சயம் நமக்கு உண்டு…

ALSO READ:  ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

50ஐ தொடும் “துக்ளக் கிழவனுக்கு” எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்…

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img