புதிய விடியலை நோக்கி…

கவிதைகள் விழாக்கள் விசேஷங்கள்

newyearwish3 - 2026
புதிய விடியலை நோக்கி…

அனைவரையும் அனுசரித்தும்;
அனைத்து செயல்களையும்
ஆர்வத்துடனும் ஆவலுடனும் செய்தும்….

இனிய மனதுடனும்
ஈடில்லா மகிழ்ச்சியுடனும்
முடிந்த வரை உதவி புரிந்தும்
மற்றவர்களின் நற்செயல்களை
ஊக்கப்படுத்தியும் ….
எளிமை வாழ்வை
ஏற்றுக் கொண்டும்…

அடுத்தவர் புறம் பேசாமலும்
பெரியோரை மதித்தும்
சக வயதோரை சிறியோரை
புரிந்தும் தத்தம் விருப்பங்களில்
ஈடுபட்டு நம் மனதை தூய்மைப்படுத்தியும்
நம்மையும் உற்சாகப்படுத்திக் கொண்டும்,
தேவையான ஓய்வு எடுத்தும்;
மன ஆரோக்கியத்துடனும்;
உடல் ஆரோக்கியத்துடனும்….

வரும் ஒவ்வொரு புதிய விடியலையும்
புத்துணர்ச்சியுடன் வரவேற்போம்,
வாரீர்.

– ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.