புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திமுக சார்பில் அண்ணாதெரு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
திமுக சார்பில் முன்னாள் கவுன்சிலர் காசிநாதன் நிதியில் அண்ணாதெரு ஜீவா தெரு, அக்ரஹாரம், முனிக்கோயில் தெரு, காந்தி பூங்கா ரோடு ஆகிய தெரு பகுதியில் 250 குடும்பத்தினருக்கு தலா ரூ.300 மதிப்பிலான காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி தலைமை வகித்தார். நகர செயலாளர் ஆனந்த் முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் பொதுக்குழு உறுப்பினர் கலைமணி ஒன்றியசெயலாளர் பொன்கணேசன் முன்னாள் கவுன்சிலர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராசேந்திரன், செல்வன், தீன், பிச்சைமுகமது, ஆறுமுகம், சக்திவேல் துளசிராமன், செல்லத்துரை, வின்சென்ட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.