ஜூன் மாதத்துக்கும் ரேஷன் கடையில் விலையில்லாப் பொருள்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை!

Published:

edappadi video conference1
edappadi video conference file picture

கொரோனாவை எதிர்கொள்ள போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; ஜூன் மாதத்துக்கும் ரேஷன் கடையில் விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படும் என்று கூறினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், அதனை தடுப்பதற்கு அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சி வாயிலாக தமிழக மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியவை:

  • தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதில் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி நோய் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  • அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நோய் தொற்றை தடுப்பது குறித்து 4 முறை ஆலோசனை நடத்தியுள்ளேன். கொரோனா தடுப்பிற்காக மூன்று ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும் உதவ 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • இதன் மூலம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் நோய்ப் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்ககைள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் மண்டலம் வாரியாக நோய் பரவலை தடுக்க நடவடிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
  • சென்னை, மக்கள் அதிகம் நிறைந்த நகரம் என்பதால் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் 3 முறை கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பொதுக்கழிப்பறையை அதிகம் பயன்படுத்துவதாலும் நோய் தொற்று ஏற்படுகிறது.
  • நடமாடும் பரிசோதனை வாகனம் மக்கள் இருக்கும் பகுதிக்கே சென்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 4000 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனைகள் தயார் நிலையில் உள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் நடவடிக்கைகளை மத்திய குழு பாராட்டியுள்ளது.
  • 50 பரிசோதனை மையங்கள் மூலம் தினமும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கபசுர குடிநீரும், நிலவேம்பு கசாயமும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
  • மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி சில தொழில்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. வெளி மாநில தொழிலாளர்களை படிப்படியாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • அரசு சரியானமுறையில் நடவடிக்கை எடுத்ததால் தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • ஜூன் மாதத்திற்குள் ரேசன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகிய விலையில்லா பொருட்கள் விநியோகிக்கப்படும்.
  • அம்மா உணவகங்கள் மூலம் தினமும் 7 லட்சம் பேருக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் யாரும் பட்டினி இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
  • கண்ணை இமை காப்பது போல் தமிழக மக்களை காத்து வருகிறது அரசு.
  • ஜூன் மாதத்திற்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்
  • சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 வேளையும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
  • அதிக மக்கள் கொண்ட பகுதி என்பதால் சென்னையில் வேகமாக கொரோனா தொற்று பரவுகிறது.
  • வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை.
  • 50 பரிசோதனை மையங்கள் மூலம் நாள்தோறும் 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
  • அம்மா உணவகம் மூலமாக நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பேருக்கு உணவளித்து வருகிறோம்.
  • கபசுர குடிநீரும், நிலவேம்பு கசாயமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது – முதல்வர் பழனிசாமி.
  • நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
  • சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
  • சென்னையில் 4,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது.
  • தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. – என்று கூறினார்
ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

Related articles

Recent articles

spot_img