நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தென் மாவட்டத்தில் மிகப்பெரிய சிவாலய திருவிழா! இருப்பினும் அறநிலையத்துறையின் மெத்தனத்தால் திருவிழாவின் பொலிவு குன்றி வருவதும், ஆகம விரோதங்களும் நடப்பது பக்தர்களின் மனத்தை புண்படுத்தும் விதமாய் அமைந்திருக்கிறது.
இன்று (12.7.19) வெள்ளிக்கிழமை 7ஆம் திருநாள் காந்திமதி அம்பாள் வீற்றிருந்த வாகனமான வெள்ளி காமதேனுவுக்கு ஒரு கொம்பு இல்லை! கடந்த ஆண்டே இது மொறிந்து விட்டது. ஒரு வருடமாகக் கண்டு கொள்ளவில்லை!
மாதம் மாதம் உண்டியலைத் திறந்து லட்சகணக்கில் பணம், தங்கம், வெள்ளி அள்ள நேரம் இருக்கிறது; தரிசன கட்டணம் வசூலிக்க நேரம் இருக்கிறது! ஆனால், அம்பாள் வாகனத்தை செப்பணிட நேரமில்லையா?
பின்னப்பட்ட உடைந்த வாகனத்தில் சுவாமியை கொண்டு வருவது பாவச் செயல்; ஆகம விரோதம் என்பது அங்கிருப்பவர்களுக்குத் தெரியவில்லையா?!
எனவே, அறநிலையத் துறை அவலத்தை கண்டித்து நாளை மறுநாள் அதாவது, 14.7.18 ஞாயிறு மாலை 4 மணிக்கு பாளை மார்கெட் திடலில், நெல்லை இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. அனைவரும் இதில் கலந்து கொண்டு நெல்லையப்பர் ஆலயத்தில் நடக்கும் ஆகம விரோதச் செயல்களை, அறநிலையத்துறையின் அவலத்தை கண்டிக்க அணி திரண்டு வரவேண்டும்!
அநியாயத்தை கண்டுகொள்ளாமல் அமைதியாய் இருப்பதே பாவம்! மகாபாரதத்தில் பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் உயிர் தத்தளிக்கும் போது அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்டான்… பீஷ்மர் பெரியவர்; நல்லவர்! அவர் இத்தகைய மோசமான சூழலைச் சந்திக்க… அவர் செய்த பாவம் என்ன என்று கேட்டான்!
கிருஷ்ணர் அதற்கு பதில் சொன்னார்… சபையில் திரௌபதிக்கு அநியாயம் நிகழ்ந்த போது பீஷ்மர் மௌனமாக இருந்தார். பாவச்செயலை செய்வது மட்டும் பாவமல்ல அதைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதும் பாவமே என்றார்!
அத்தகைய பாவச் செயலுக்கு நாம் இலக்காகக் கூடாது! ஆகம விரோதமாக ஆலய விழா நடத்தி வறட்சியையும் பஞ்சத்தையும் எதிர்கொள்ளக் கூடாது! ஊர் செழித்திட, நல்ல மழை பெய்திட, திருவிழாவை குறைவின்றி நடத்துவோம். எனவே, அறநிலைய துறை அவலத்தை தட்டிக் கேட்போம் வாருங்கள்!
– கா.குற்றாலநாதன், நெல்லை




