இரவு 10 மணிக்கு மேல் கடை திறக்கலாமாம்… கொடை நடத்தக் கூடாதாம்.. என்னய்யா நியாயம்?!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்

radhapuram mla in assembly - 2026

உண்மையை உரக்கச் சொன்ன ராதாபுரம் எம்.எல்.ஏ.,வுக்கு நம் வாழ்த்துகள் என்று  பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில் கொடை விழா நிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு மேல் நடக்காமல் இருப்பதை சட்டப் பேரவையில் சுட்டிக் காட்டிய ராதாபுரம் தொகுதி அதிமுக., எம்.எல்.ஏ.. இன்பதுரைக்கு இப்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சட்டமன்றத்தில் அதிரடியாக எடப்பாடி அரசு தவறுகள் சிலவற்றை அதிமுக எம்எல்ஏ சுட்டிக்காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ இன்பதுரை இன்று சட்டமன்றத்தில் அதிரடியாக சில கருத்துகளை முன்வைத்தார். அதில் முக்கியமான ஒரு கருத்து ஹிந்து இயக்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்க காரணமாக அமைந்த கருத்து!

இது குறித்து இன்பதுரை இன்று சட்டமன்றத்தில் தன் கருத்தை முன்வைத்தபோது… திருநெல்வேலி மாவட்டத்தில் கொடை விழா என்ற வழிபாடு என்பது மிகவும் புகழ் பெற்றது. இந்த கொடைவிழா வழிபாடு நள்ளிரவு வரை நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால் இப்பொழுது திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பழக்கம் வந்திருக்கிறது… இரவு 10 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்று கட்டுப்படுத்தி ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அது தவறு!

ஏனென்றால் இறை வழிபாட்டுக்கு எந்த தடையும் இருக்கக்கூடாது. தமிழக அரசு தற்போது புதிதாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது! இருபத்தி நான்கு மணி நேரமும் தொழில் செய்யலாம்; கடைகள் திறந்து இருக்கலாம் என்று ஒரு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது!

கடைகள் திறந்து வைக்கலாம் என்று ஒரு சட்டம் வந்திருக்கும் பொழுது 10 மணிக்கு மேல் கொடை நிகழ்ச்சி வழிபாடுகள் கூடாது என்று சொல்வது முரண்பாடாக இருக்கிறது என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்று கூறினார்…

அவர் பேசியதன் காணொளி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.