அரசுப் பள்ளிகளில் எல்கேஜி., யுகேஜி., வகுப்புகள் தேவை: சரத்குமார்

Sarathkumar_Aismkசென்னை: அரசுப் பள்ளிகளில் ப்ரிகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப் பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஒரு காலத்தில் பள்ளிப்படிப்பு 5 வயது பூர்த்தியானதில் இருந்து தொடங்கியது.  பின்னர் LKG, UKG போன்ற வகுப்புகள் தொடங்கியதிலிருந்து  3 வயது பூர்த்தி  ஆனதில் இருந்தே பள்ளிப்படிப்பு தொடங்கி விட்டது.  இன்னும் ஒரு படி மேலாக,  3 ஆம் வயது ஆரம்பத்திலேயே Pre Kg.   என்ற வகுப்பில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.  பட்டப்படிப்பு, மேற்படிப்பு,  பொறியியல், மருத்துவம் என்று கல்வி கற்கும் போது ஏறக்குறைய 20 வருடங்கள் பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்க நேரிடுகிறது. Pre Kg. LKG, UKG என்று குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும்  ஆர்வம்  பெற்றொர்களுக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லுதல், இதே வகுப்புகளில் குழந்தைகளுக்கு படிப்பு மட்டுமல்லாது விளையாட்டுகள் போன்ற தனி கவனம் கிடைத்தல் போன்ற காரணங்களால் 3 வயது முடிந்தவுடன்  பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது அவசியமாகி விட்ட்து. பெற்றோர்களின் இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகள் கனிசமான  / அபரிமிதமான கட்டணம் வசூலித்து வருகின்றன. சில பள்ளிகள் Play School என்றும் மழலையர் பள்ளிகள் என்றும் நடத்தி வருவதும் கண்கூடு. ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்குக் கூட LKG,UKG படித்திருக்க வேண்டும் என்ற தகுதி நிர்ணயம் எழுதப்படாத விதியாக இருப்பதற்கு பெற்றோர்களின் ஆர்வம் காரணமா? அல்லது பள்ளிகளின் நிர்பந்தம் காரணமா? என்ற விவாதத்தை உருவாக்குகிறது. ஆக, தெரிந்தோ, தெரியாமலோ Pre kg முதலே பள்ளிப்படிப்பு ஆரம்பம் என்பது நடைமுறையாகிவிட்டது. எனவேதான் இந்த பிரச்னையில் அரசு களமிரங்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். ஒருபுறம் தங்கள் பிள்ளைகள் prekg  முதலே படிக்க வேண்டும் என்ற ஆர்வம், மறுபுறம் தனியார் பள்ளிகளில்  அபரிமிதமான கட்டணம்  என்ற இரண்டுக்கும் நடுவில்  சிக்கி ஏழை எளிய நடுத்தர மக்கள் தவித்து வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. Pre Kg யில் நன்கொடை கொடுக்கத் தொடங்கிதிலிருந்தே பெற்றோர்களின் கடன் சுமையும் தொடங்கி விடுகிறது. படிப்படியாக அந்த சுமை உயர்ந்து கொண்டே போகிறது. எனவே, அரசே Pre Kg. LKG,UKG வகுப்புக்களை தொடங்குவது குறித்து பரிசீலித்து  நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். இதன்மூலம், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கனவு நிறைவேறும். பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த வகுப்புகள் தொடங்குவதால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். தனியார் பள்ளிகளின் அபரிமிதமான கட்டண வசூலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். சமுதாயத்தில் கல்விப் புரட்சிக்கு வழிவகுக்கும். தங்கள் பிள்ளைகள்  Pre Kg. LKG,UKG படித்தார்கள் என்ற மகிழ்வும் மனநிறைவும் கிராமப்புறம் சார்ந்த பெற்றோர்களுக்கும் ஏற்படும். எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு வரும் கல்வி ஆண்டு முதல் ஆரம்பப் பள்ளிக் கல்வியில்  Pre Kg. LKG,UKG வகுப்புக்களைத் தொடங்குவதற்கு சீரிய முயற்சி மேற்கொண்டு  நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Entertainment News

Popular Categories