*சென்னை தியாகராய நகரில் உள்ள அன்பில் பொய்யாமொழி வீட்டிற்கு சென்று ஸ்டாலின் அஞ்சலி.
*அன்பில் பொய்யாமொழிக்கு நினைவுநாள் என்பதால் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..
*திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோபாலபுரம் வருகை – கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை..
*கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார் மு.க.ஸ்டாலின்
*திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வதற்கு முன் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார் மு.க.ஸ்டாலின்
*சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது :
*பொதுக்குழு கூட்டத்தில் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு
*அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு இரங்கல் குறிப்பை வாசித்து வருகிறார் டிகேஎஸ் இளங்கோவன்
*தி.மு.க பொதுக்குழுவில் கலைஞர்மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்.
*சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கும் திமுக பொதுக்குழுவில் இரங்கல்
லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல்
முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவிற்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல்
மறைந்த ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னானுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது
கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு திமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது
திமுக தலைவர் கலைஞரின் மறைவு செய்தி கேட்டு இன்னுயிர் நீத்த 248 திமுக தொண்டர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கபடும் – திமுக பொதுக்குழுவில் அறிவிப்பு
அரியலூர் மாணவி அனிதாவிற்கு திமுக செயற்குழுவில் இரங்கல்




