02 July13 electric train - 2026

சென்னை: பேசின்பிரிட்ஜ் – வில்லிவாக்கம் இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால் சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், திருத்தணி மற்றும் அரக்கோணத்துக்கு இயக்கப்படும் 27 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஞாயிறு காலை 10:05 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து, ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் சைடிங், கடம்பத்துார், திருத்தணி, அரக்கோணத்துக்கு இயக்கப்படும் 18 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, இதே ஊர்களுக்கு இயக்கப்படும், ஆறு ரயில்கள் மற்றும் அரக்கோணத்தில் இருந்து, சென்ட்ரலுக்கு இயக்கப்படும் மூன்று ரயில்கள் என, மொத்தம், 27 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு மதியம், 2:25 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில், நாளை, சென்ட்ரல் – ஆவடி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில், ஆவடியில் இருந்து, திருத்தணிக்கு, மாலை, 3:00 மணிக்கு இயக்கப்படும்

அரக்கோணத்தில் இருந்து, காலை 8:10 மணி திருவள்ளூரில் இருந்து காலை 9:10 மணி, பட்டாபிராமில் இருந்து காலை 10:30 மணி, திருத்தணியில் இருந்து காலை 9:40 மணிக்கு சென்ட்ரலுக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், நாளை ஆவடி – சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

சிறப்பு ரயில்கள்: ஆவடியில் இருந்து அரக்கோணத்துக்கு, காலை 11:10 மணிக்கும், பட்டாபிராமுக்கு மதியம், 1:50 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன

சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 9:45 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன

அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு காலை 11:55 மணி, மதியம் 1:50 மணி மற்றும் 2:25 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன

திருவள்ளூரில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 1:15 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending