‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

S muthiah madrasmusings - 2026

பத்திரிகையாளரும், வரலாற்று எழுத்தாளருமான முத்தையா உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 89.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரில் 1930ம் ஆண்டு பிறந்தவர் எஸ்.முத்தையா. இவரது தந்தை பெயர், என்.எம்.சுப்பையா செட்டியார்.

இவர் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கொழும்பு நகர முதல்வராகப் பணியாற்றிய பெருமை மிக்கவர். எனவே, எஸ்.முத்தையா கொழும்பில்தான் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார்.

இதன் பிறகு அமெரிக்காவில் 1946 முதல் 1951 வரை கட்டிட பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் பயின்றுள்ளார். மெட்ராஸ் மியூசிங்ஸ் என்ற பத்திதிகையை நடத்தினார். சென்னை குறித்து அறியப்படாத பல அரிய தகவல்களை ஹிந்து ஆங்கிலப் பத்திரிகையில் பல வருடங்களாகத் தொடர்ந்து எழுதினார்.

சென்னை வாழ் மக்களுக்கு நன்கு பழக்கமான மெட்ராஸ் மியூசிங்ஸ் என்ற உள்ளூர் பத்திரிகையில் அதிகம் எழுதி வந்தார். சென்னை உருவான வரலாறு, சென்னையில் வாழ்ந்த பிரபலங்கள் பற்றி இந்து, ஆங்கில நாளிதழில் தொடர்ந்து எழுதி வந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.