அதிமுக., நலன் கருதி நோட்டீஸ் முடிவு! சபாநாயகர் நடவடிக்கையை விமர்சிக்கக் கூடாது!

Published:

pon radhakrishnan - 2026

அதிமுக நலன் கருதியே 3 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியதாக கருதுகிறேன் என்றும் சபாநாயகர் மேற்கொள்ளும் நடவடிக்கையை விமர்சிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

முன்னதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மற்றும் நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப் பட்டது.

தொடர்ந்து, சபாநாயகர், அரசுக்கொறடா, சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் நடத்திய ஆலோசனையில் 4 எம்.எல்.ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு  செய்யப் பட்டது.  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வென்ற நால்வருக்கும் நோட்டீஸ் அனுப்ப கொறடா அளித்த பரிந்துரையின் படி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளது அதிமுக.

தமிமுன் அன்சாரி நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்த நிலையில் அவருக்கும் நோட்டீஸ் அனுப்பப் படலாம் என்று தெரிகிறது.

Related articles

Recent articles

spot_img