ரிபப்ளிக் டிவி.,யால் இடிந்துபோன இடிந்தகரை உதயகுமாரை கலாய்க்கும் ரஜினி ரசிகர்கள்!

சென்னை தமிழகம்

sp udayakumar - 2026

சென்னை:
கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்திய இடிந்தகரை சுப. உதயகுமார், ரிபப்ளிக் டிவியின் ஸ்டிங் ஆபரேஷனால் இடிந்து போய் உள்ளார். போராட்டங்களுக்கு சர்ச் தூண்டுதலில், பணம் பெறும் வழிமுறைகளைக் கூறிய உதயகுமார் மீது பலரும் கண்டனங்களை முன்வைத்துள்ளனர்.

முன்னதாக உதயகுமார், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவரது முகநூல் பதிவில், ரஜினிக்கு 4 கேள்விகள்.. பதில் கூறுவாரா? என்று கேட்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி தனது முகநூல் பக்கத்தில் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.

திரு. ரஜினிகாந்த் அவர்களின் கட்சியில் இணைகிறேன்!

  1. ஒரு வெற்றுத் தமிழக வரைபடத்தில் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் திரு. ரஜினிகாந்த் அவர்கள் சரியாக அடையாளப்படுத்துவாரா?

  2. நெடுவாசல், வடகாடு, கதிராமங்கலம், திட்டக்குடி போன்ற ஊர்கள் பற்றி ஐந்து, ஐந்து வரிகள் எழுதித் தருவாரா?

  3. எங்கள் இடிந்தகரைப் பள்ளி மாணவி ஒருவரோடு கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி ஐந்து நிமிடம் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விவாதிப்பாரா?

  4. கெய்ல், என்.பி.சி.ஐ.எல்., ஓ.என்.ஜி.சி., மாப்ஸ், ஐ.என்.ஓ. இவையெல்லாம் என்னவென்று சொல்லி, இரண்டிரண்டு வாக்கியங்கள் பேசுவாரா?

இவற்றைச் செய்தால், அவரும், ஆண்டவனும் சேர்ந்து துவங்கப்போகும் கட்சியில் இணைந்திட அணியமாய் இருக்கிறேன் நான்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. ஏற்கெனவே ரிபப்ளிக் டிவியின் ஸ்டிங் ஆபரேஷனால் இடிந்து போயுள்ள உதயகுமாருக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.