இந்தக் காரணத்துக்காகவா குழந்தையைக் கொல்வது? கொடுரத் தாய்!

சென்னை லைஃப் ஸ்டைல்

child murder mother arrested - 2026

சென்னை வேளச்சேரியில்  பிறந்து ஒரு மாதமே ஆன நிலையில் மாயமான பச்சிளம் குழந்தை ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தக் குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய அக் குழந்தையின் தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வேளச்சேரி ஏரிக்கரை அருகில் குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் வசிக்கும் வெங்கண்ணா – உமா தம்பதிக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இரு தினங்களுக்கு முன்னர் காற்றுக்காக கதவைத் திறந்து வைத்துவிட்டு தூங்கியதாகவும், அதிகாலை 5 மணி அளவில் குழந்தை மாயமானதாகவும் வெங்கண்ணா வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதை அடுத்து குழந்தை மாயமானதாக வழக்குப் பதிந்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அதிகாலையில் ரோந்து சென்ற போலீசார், பெண் ஒருவர் குழந்தையை தூக்கிச் செல்வதை பார்த்ததாகத் தெரிவித்தனர்.

இதை அடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்குமாம்; தமிழகத்துக்கு பேராபத்து: எச்சரிக்கும் இந்து முன்னணி!

அப்போது, உமாதான் குழந்தையை ஏரிப் பகுதிக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, குழந்தை பால் குடிக்கும் போது தனக்கு மார்பகத்தில் வலி ஏற்பட்டதாகவும், இது குறித்து பல முறை வெங்கண்ணா விடம் கூறியும் அவர் கண்டு கொள்ளாததால் குழந்தையைக் கொலை செய்து ஏரியில் உடலை வீசியதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து தாய் உமாவை போலீசார் கைது செய்துள்ளனனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையைக் கொல்வதற்கான காரணம் இதுதானா என பலரும் வருத்தப் பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.