
பாஜக தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மாநிலத்தின் கிராமம்தான், உலகின் நம்பர் ஒன் பணக்கார கிராமம்..
குஜராத்தில் இருக்கும் மதாபர் என்ற கிராமம் உலகிலேயே மிகப்பெரிய பணக்கார கிராமமாக உருவெடுத்து உள்ளது.
இந்த கிராமத்தை பற்றி படிக்க படிக்க பல்வேறு ஆச்சர்யங்கள் வெளியே வருகின்றன.
தெருவுக்கு தெரு பேங்க்.. எல்லோருக்கும் வங்கி கணக்கு.. பல கோடி சேமிப்பு என்று குஜராத்தில் இருக்கும் குட்டி கிராமமான மதாபர் உலக பொருளாதார வல்லுநர்களையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
7600 வீடுகள் இருக்கும் இந்த கிராமம்தான் உலகிலேயே பணக்கார கிராமம் என்கிறார்கள்.. அப்படி இந்த கிராமத்தில் என்ன இருக்கிறது?
எப்படி கிராமத்தில் இருக்கும் எல்லோரும் வங்கி கணக்கு வைத்து இருக்கிறார்கள்.. எப்படி இந்த கிராமம் பணக்கார கிராமமாக உருவெடுத்தது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்!
குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டம் அருகே அமைந்துள்ளது மதாபர் கிராமம். இந்த கிராமம் குறித்து தெரிந்து கொள்ளும் முன் குட்ச் மாவட்டம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மாவட்டம் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டம். அதிலும் வரலாற்று ரீதியாக, பல காலமாக கை வேலைப்பாடுகள், கட்டுமான பணிகள் செய்யும் மக்கள் வசிக்கும் மாவட்டம் ஆகும். குட்ச் மாவட்டத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் இவர்களை “மேஸ்திரிஸ் ஆப் குட்ச்” என்று அழைப்பார்கள்.
முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் மதாபர் கிராமத்தில் மக்களின் முக்கிய தொழில் கட்டுமான துறை, டைல்ஸ் பதிப்பது போன்ற இன்டிரியர் வேலைகள்தான். இந்தியாவிலேயே.. ஏன் உலகிலேயே இதுதான் பணக்கார கிராமம். வங்கியில் மக்கள் வைத்து இருக்கும் பண இருப்பு அடிப்படையில் இந்த கிராமத்தை பணக்கார கிராமம் என்று வரையறுக்கிறார்கள். இந்த கிராமத்தில் மட்டும் மொத்தம் 17 வங்கிகள் உள்ளது.
ஆம் மொத்தம் 7600 குடும்பம் வசிக்கும் ஊரில் 17 வங்கிகள் உள்ளன. சராசரியாக 447 குடும்பங்களுக்கு 1 வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கிகளில் மொத்தம் இந்த கிராம மக்கள் மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாயை சேமித்து வைத்து இருக்கிறார்கள். ஆம் இந்த 7600 குடும்பங்களின் மொத்த சேமிப்பு மட்டும் 5000 கோடி ரூபாய். சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் 65 லட்சம் ரூபாய் வரை வங்கியில் சேமித்து வைத்து இருக்கிறது. இது சராசரி கணக்குதான். சில குடும்பங்கள் குறைவாகவும், சில குடும்பங்கள் 1 கோடிக்கு அதிகமாகவும் வங்கியில் சேமித்து வைத்து இருக்கிறார்கள்.
வங்கி சேமிப்பு அடிப்படையில் 5 ஆயிரம் கோடி ரூபாயை சேமித்து வைத்து இருக்கும் இந்த மதாபர் கிராமம்தான் உலகிலேயே நம்பர் 1 பணக்கார கிராமம்.
ஆனால் இந்த பணத்தை இவர்கள் உள்ளூர் கட்டுமான பணிகளில் இருந்து மட்டும் சம்பாதிக்கவில்லை. இந்த கிராமத்தில் முந்தைய தலைமுறை மக்கள் எல்லோரும் உள்ளூர் கட்டுமான பணிகளை செய்யும் நிலையில், தற்போதைய தலைமுறை இளைஞர்கள் பலரும் வெளிநாடுகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்கிறார்கள்.
அமெரிக்கா, லண்டன், ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்கிறார்கள். தற்போதைய தலைமுறை இளைஞர்கள் பலர் இந்த கிராமத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். கட்டுமான பணிகளில் இவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய அனுபவத்தால் வெளிநாடுகளில் அடுத்தடுத்து பல்வேறு கட்டுமான பணிகளில் பணியாற்றி தங்கள் கிராமத்திற்கு பணம் அனுப்புகிறார்கள். வெளிநாடுகளில் நன்றாக சம்பாதித்துவிட்டு, அதை தங்கள் கிராமத்து வங்கியிலேயே சேமித்துவிட்டு சில ஆண்டுகளுக்கு பின் திரும்பி ஊருக்கு வந்து கட்டுமான நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
கிட்டத்தட்ட 7600 வீடுகளில் எல்லா வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு பேர் வெளிநாட்டில் இருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து வரும் டாலர்கள்தான் இவர்கள் வங்கிகளில் லட்சங்களில் பணம் சேர்க்க காரணம் ஆகும். வெளிநாடுகளில், முக்கியமாக லண்டனில் இந்த கிராமத்து மக்கள் அதிகம் பணியாற்று கிறார்கள். இதனால் லண்டனில் மதாபர் கிராமத்திற்கு என்று தனியாக அசோசியேஷன் கூட இருக்கிறது. அங்கே இருக்கும் மக்கள் எளிதாக ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள இந்த அசோசியேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
கட்டுமான துறை போக விவசாயத்திலும் இந்த கிராமம் டாப்பில் உள்ளது. தொடர்ந்து மூன்று போக விளைச்சலை மேற்கொண்டு வரும் இந்த கிராமம் மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களுக்கு கோதுமை, அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது. பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், ஏரிகள், பூங்காக்கள், அணைகள், கோவில்கள், மருத்துவமனைகள், ஏன் மாடுகளுக்கு என்று உலகத்தரம் வாய்ந்த பண்ணைகள் கூட அமைக்கப் பட்டுள்ளது.
எப்படி வருமானம் ஈட்டுவது.. அதை எப்படி சேமித்து பொருளாதாரத்தை பெருக்குவது.. சிறிய வருமானத்தை கூட எப்படி முதலீடாக மாற்றுவது என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாக இந்த கிராமம் உருவெடுத்துள்ளது. காரணம்..?நரேந்திர மோடி 13 ஆண்டுகள் முதல்வராகவும், அதைதொடர்ந்து பிஜேபி ஆட்சியில் இருப்பதாலும்தான்.
அதிலும் 5000 கோடி சேமிப்பு எல்லாம் கொஞ்சம் கூட நினைத்து பார்க்க முடியாத ஒன்று. உலக பொருளாதார வல்லுநர்களுக்கு.. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், குஜராத்தில் இருக்கும் மதாபர் கிராமம் ரோல் மாடலாக உருவெடுத்துள்ளது.
1995-ம் ஆண்டிலிருந்து குஜராத்தை தொடர்ந்து ஆட்சி செய்து வருவது பா.ஜ.க-தான். இந்த 22 ஆண்டுகளில் 13 ஆண்டுகள் நரேந்திர மோடி அவர்கள் முதல்வராக இருந்திருக்கிறார். அந்த மாநில கிராமத்து மக்கள் சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் 65 லட்சம் ரூபாய் வரை வங்கியில் சேமித்து வைத்து இருக்கிறார்கள்.
தமிழகத்தில் திராவிட கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்து, தமிழக குடும்பம் ஒவ்வொன்று பேரிலும் ரூபாய் 2லட்சத்து 63 ஆயிரம் கடன் வாங்கி வைத்துள்ளது.
குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராக இருந்த மோடி ஏழ்மையாக உள்ளார்..அந்த மாநில மக்கள் வசதியானவர்களாக உள்ளனர்.
தமிழகத்தில் திராவிட கட்சி தலைவர்கள் வசதியானவர்களாக உள்ளனர்.மக்கள் ஏழ்மையானவர்களாகவே உள்ளனர்.
இனியாவது தமிழக மக்கள் யார் வசதியானவர்கள் ஆகவேண்டும் என யோசித்தால் நல்லது.
- ஸ்டான்லி ராஜன்