
விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்கள் குறித்து, தமிழக விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்ல அனைவரையும் நேரில் சந்தித்து கடிதம் கொடுப்போம் என்று கூறினார் தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை.
பாஜக., தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மின் தடை ஏற்பட்டதால் கூட்ட அரங்கில் இருந்த விளக்குகள் அணைந்து விட்டன.
அப்போது பேட்டி அளிப்பதை சற்று நிறுத்திய, அண்ணாமலை, ‘ஐ திங்… அணில் ஓடிட்டு இருக்கும்’ என கிண்டலாகச் சொன்னதும் அனைவரும் சிரித்தனர். இது இணையத்தில் இப்போது மீம் பாணியில் உலா வருகிறது.