சாராயக் கடைகளை மூடிவிட்டு, நிவாரணத் தொகையைக் கையில் கொடுங்க!

Published:

file pic

மேம்பாலம் கட்டுவதால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்காது. உலகில் வளர்ந்த நாடுகளில் நகரங்களுக்குள் மேம்பாலங்கள் கிடையாது என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேச்சினார் அன்புமணி. அப்போது அவர் கூறியதாவது: 

பீஹார், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்கள் போல் தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக முதல்வர் தயங்குவது ஏன்? சமூக நீதி பேசும் திமுக தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்? சமூக நீதி பேசும் திமுக தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்? இல்லையெனில் சமூக நீதி குறித்து திமுக பேச கூடாது.

ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் மாவட்டங்களில் அடுத்த 1 வாரத்திற்கு அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். இல்லையெனில் அந்த பணம் டாஸ்மாக் கடைக்குதான் போகும்.

மாடர்ன் தியேட்டர்ஸ் சேலத்தின் பெருமை அதனை பாதுகாக்க வேண்டும். மேம்பாலம் கட்டுவது போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடையாது. உலகில் வளர்ந்த நாடுகளில் நகரங்களுக்குள் மேம்பாலங்கள் கிடையாது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

தமிழகத்தில் மது விற்பனையை போல் கஞ்சா விற்பனை உச்சத்திற்கு சென்றுள்ளது. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நமது கலாச்சாரம் கிடையாது. தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடை உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் வணிகமாக மாறிவிட்டது.

சேலத்தில் நிலவி வரும் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதில்லை. மேட்டூர் உபரிநீர் திட்டத்தை தலைவாசல் வரை கொண்டு செல்ல வேண்டும். திருமணிமுத்தாறு, சரபங்கா நதிகளை இத்திட்டத்தில் இணைக்க வேண்டும்.

சேலத்தில் எத்தனையோ மேம்பாலங்கள் கட்டியும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய முடியவில்லை. இரும்பாலையை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது.

மக்கள் நலத்திட்டங்களை செய்ய திமுக அரசு தயங்குகிறது. 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்டும் மாவட்டங்களில் அடுத்த 1 வாரத்திற்கு டாஸ்மாக் கடையை மூட வேண்டும்‌; இல்லையெனில் அந்த பணம் டாஸ்மாக் கடைக்குதான் போகும்

மேம்பாலங்களை கட்டுவது போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாகாது. தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை ஒழிக்க போதை ஒழிப்பு பிரிவில் 20 ஆயிரம் காவலர்களை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் கோடி கணக்கில் இளைஞர்கள் வேலை இன்றி உள்ளது.

டிஎன்பிஎஸ்சியை மூடி விடலாம். ஆளுநருக்கும் அரசுக்கும் உள்ள பிரச்சினையில் மக்கள் ஏன் பாதிக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இந்த ஆண்டுதான் குறைந்த எண்ணிக்கையில் அரசு நியமனம் நடைபெற்றுள்ளது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டுக்கு 1.20 லட்சம் அரசு நியமனம் செய்வோம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு 5 ஆயிரம் பணி நியமனம் கூட இல்லை. தமிழ்நாடு அரசு வாட்டர் மேனேஜ்மென்ட் ஸ்ட்ரக்சருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

டோக்கியோ போன்ற நகரங்களை முன் உதாரணமாக கொண்டு சென்னையில் மழைநீர் வடிகால்வாய்களை அமைக்க வேண்டும். சென்னையில் 10 ஏரிகளை உருவாக்கி வெள்ள நீரை ஏரிக்கு கொண்டு செல்லலாம். லஞ்சம் கொடுத்து ஏரியில் வீடு கட்டியவர்கள் தற்போது அனுபவிக்கிறார்கள். அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் இதை விட பெரிய வெள்ளம் சென்னைக்கு வர உள்ளது.

இயற்கை பேரிடர்களை தடுக்க முடியாதுதான், ஆனால் சேதங்களை குறைக்க முடியும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த தெரியாமல் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதில் மட்டுமே குறியாக உள்ளனர்.

4000 கோடியில் மாபெரும் குளறுபடி உள்ளது. கடந்த 2 ஆட்சியிலும் வடிநீர் கால்வாய்க்கு செய்த பணிகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். சிபிசிஎல் ஒன்னும் தெரியாதது போல் நடித்து கொண்டிருக்கிறது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

திமுக அரசின் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்தி இல்லை. சில அமைச்சர்கள் இந்த விவகாரத்தில் ஆணவமாக பேசினர்.

மாடர்ன் தியேட்டர்ஸ் சேலத்தின் பெருமை. 5 முதலமைச்சர் இங்கு பணியாற்றி உள்ளனர். பெருமை மிக்க இந்த அடையாள சின்னத்தை பாதுகாக்க வேண்டும். இதில் அரசியல் திணிக்க கூடாது. இடம் யாரிடம் இருந்தாலும் அதை பாதுகாக்க வேண்டும். யாருக்கும் அச்சுறுத்தலாக இருக்க கூடாது.

சபரிமலை சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். கேரளாவில் தீவிரமடைந்து வரும் கொரோனாவால் பெரிதும் அச்சம் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

நாடாளுமன்ற தேர்தலில் பாமகவின் கூட்டணி நிலைபாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

Related articles

Recent articles

spot_img