
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஜம்முவில் 99.5 சதவீத வாக்குகள் பதிவானது.
ஜம்மு மாவட்டத்தில் உள்ள 20 வட்டார வளர்ச்சிக்குழுக்களுக்கு நேற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
மதியம் 1 மணி அளவில் வாக்குப்பதிவு முடிந்தது. இந்திய வரலாற்றிலே முதன்முறையாக இந்த தேர்தலில் 99.5 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
சிறப்பு அந்தஸ்து நீக்கபட்டபின், அதிக வாக்குகள் பதிவாகி இருப்பது அங்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாக்குச்சீட்டு முறையில் இந்த பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் முடிந்தவுடனே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகின.
இதில் 310 கவுன்சில்களில் 217 இடங்களில் சுயேட்சைகளும், 81 இடங்களில் பாஜகவும் வெற்றிபெற்றது.