பிரபல சின்னதிரை நடிகையின் கணவர் தற்கொலை!

Published:

ragavi 1 1 - 2026

தமிழ் சினிமாவில் ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ராகவி , பின்னர் ஒன்ஸ்மோர் மருதுபாண்டி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சின்னத்திரையிலும் திருமதி செல்வம் மகாலட்சுமி போன்ற சீரியல்களில் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டவர் நடிகை ராகவி ஆவார்.

நடிகை ராகவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் சசிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடன் சுமை காரணமாக தனக்கு சொந்தமான ஸ்டுடியோவில் இருந்த கேமராவை அடகு வைத்திருக்கிறார் சசிகுமார். இதனைத்தொடர்ந்து சசிகுமாருடன் வேலைபார்க்கும் மகேஷ் என்பவர் சசிகுமார் ஒரு கேமரா திருடன் என்று சமூகவலைத்தளத்தில் தகவல் பரப்பி வந்ததாக கூறப்படுகிறது.

ragavi husband - 2026

இதனால் சோகம் தாங்காமல் கடந்த ஒன்பதாம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சசிகுமார் , வேலூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டையில் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் இருந்த மரத்தின் கிளையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக இருந்த சசிகுமாரை கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . தூக்கில் தொங்கிய நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டபோது அவர் சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் ஒளிப்பதிவாளர் சசிக்குமார் என்று தெரியவந்துள்ளது.

ragavi - 2026

இதனையடுத்து தகவலறிந்து வந்த சசிகுமாரின் மனைவி நடிகை ராகவி தன்னுடைய கணவரின் மரணத்திற்கு மகேஷ் தவறாக பரப்பிய செய்தி தான் காரணம் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Related articles

Recent articles

spot_img