பிரியங்கா ரெட்டி படுகொலைக்குப் பின்… 100க்கு டயல் செய்த பெண்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
IMG 20191129 WA0036 - 2026

டயல் 100 க்கு போன் செய்த பெண். உடனடியாக உதவ ஓடிவந்த போலீசார்.

டாக்டர் பிரியங்கா கொலை வழக்கு ஹைதராபாத் நகரை கலங்கச் செய்து வரும் சூழலில் டயல் 100 குறித்து போலீசார் விஸ்தாரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஆபத்தில் இருக்கும்போது எந்த சிறிய உதவி வேண்டுமானாலும் தயங்காமல் டயல் 100 க்கு போன் செய்யச் சொல்லி டிஜிபி கேட்டுக்கொண்டார்.

இந்தச் சூழ்நிலையில் டயல்100டம் உதவி கேட்டு அழைத்த பெண்ணுக்கு உடனே உதவி செய்து தம் வார்த்தையை மெய்ப்பித்துக் கொண்டனர் போலீசார்.

IMG 20191129 WA0035 - 2026

ஒரு பெண் டயல் 100-க்கு போன்செய்து ஸ்கூட்டியில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால் வழியில் சிரமப்படுவதாக போலீசார் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

உடனே உதவுவதற்கு எல்பி நகர் போலீசார் ஒரு பாட்டிலில் பெட்ரோல் எடுத்துச் சென்று ஸ்கூட்டியில் ஊற்றியுள்ளனர்.

IMG 20191129 WA0037 - 2026

இது தொடர்பான போட்டோவை ராச்சகொண்டா போலீசார் டுவிட்டரில் போஸ்ட் செய்துள்ளனர்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

அதனைப் பாராட்டி மகிழ்கின்றனர் நெட்டிசன்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.