இணைந்தே இருக்க வேண்டியது: வித்தையும், வினயமும்.. உதாரணமாய் திகழும் ஆச்சார்யாள்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
abinava vidhya theerthar

ஆச்சார்யாள் ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் ஒரு சமயத்தில் எஸ் என் பரமேஸ்வரர் என்ற பக்தரின் சகோதரர் ஸ்ரீதண்டவேஸ்வரரின் இடத்தில் தங்கியிருந்தார்கள்.

அங்கு நடந்த ஒரு சம்பவத்தினை எஸ் என் பரமேஸ்வரார் அவர்கள் பகிர்கிறார்கள்.

அவர் தங்கியிருந்த அறையில் ஒரு திறந்த அலமாரியில் சில புத்தகங்கள் இருந்தன. நான் அந்த அலமாரியில் ஒரு குறிப்பேட்டை வைத்திருந்தேன், அதில் நான் கன்னடத்தில் சில ஸ்லோகங்களை எழுதினேன்;

எழுதியவற்றை நான் ஒவ்வொரு நாளும் படித்துக் கொண்டிருந்தேன். ஆச்சார்யாளின் பிக்ஷாவுக்குப் பிறகு, அவர் சில புத்தகங்களைப் பார்த்து கொண்டிருந்தார். நான் மாலையில் அவரது தரிசனத்திற்காகச் சென்றபோது, ​​அவர் என்னிடம், நீங்கள் எழுதிய ‘நோட்புக்கை என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று சொன்னார். நான் அவ்வாறு செய்தபோது, ​​அவர் சொன்னார்,

abinav vidhya theerthar

‘நான் மதியம் இந்த நோட்புக்கினை எடுத்து வாசித்தேன். கன்னடத்தில் நீங்கள் சில ஸ்லோகங்களை எழுதியுள்ளீர்கள், அதை நீங்கள் தினமும் பாராயணம் செய்துக் கொண்டிருக்கலாம். சில வசனங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. என்னால் முடிந்த அளவுக்கு அவற்றை சரி செய்துள்ளேன்.

நீங்கள் தவறானவற்றை பாராயணம் செய்வதை நான் விரும்பாததால் நான் அவ்வாறு செய்தேன். அவற்றின் சரியான தன்மையை நீங்கள் சரிபார்த்து அவற்றை நீங்கள் பாராயணம் செய்து கொள்ளலாம். ’அப்படிச் சொல்லி, அவர் என்னிடம் நோட்புக்கினைக் கொடுத்தார்.

அவரது இணையற்ற கல்வித் திறத்திற்கும், மேன்மைக்கும் அவர் அமர்ந்துள்ள பீடத்திற்கும் அவர் எளிதில் அதனை சுட்டிக் காட்டி சொல்லியிருக்க முடியும், ஆனால அவரோ ‘நான் தவறுகளைச் சரிசெய்தேன். நீங்கள் இப்போது பிழையின்றி அவற்றை பாராயணம் செய்து கொள்ளலாம். ’என்று கூறாமல், அதற்கு பதிலாக, அவர் தன்னால் முடிந்த அளவிற்கு தவறுகளைச் சரிசெய்ததாகவும், அவற்றின் சரியான தன்மையை நான் சரிபார்க்கலாம் என்றும் மட்டுமே கூறினார். அவருடைய பணிவு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

என்று ஆச்சார்யாளுடன் ஏற்பட்ட அனுபவத்தினை பகிர்ந்து கொள்கிறார்.

நன்றி: பன்முக ஜீவன்முக்தா – அவரது புனித ஜகத்குரு ஸ்ரீ அபிநவா வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.