அவரவர் வேண்டும் வடிவில் இறைவன்! ஆச்சார்யாள் அருளமுதம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
abinav vidhya theerthar

ஒருவன் நவ நாகரீகமாக பேண்ட் சட்டை எல்லாம் போட்டுக்கொண்டு கழுத்தில் டையை கட்டிக் கொண்டு காலில் ஷூ போட்டுக்கொண்டு தனது அலுவலகத்திற்கு புறப்பட்டு செல்லும் வழியில் சந்தித்த அவனது நண்பன் அவன் முதுகில் செல்லமாக தட்டி நீ கம்பீரமாக இருக்கிறாய்.

உன்னை பார்த்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது உன்னுடைய பதவியான விற்பனை பிரதிநிதிக்கு ஏற்ற இந்த உடையில் சென்றால்தான் பலரையும் சந்தித்து சாதித்து பல முன்னேற்றங்களைப் பெறமுடியும் என்று கூறினான்.

வேலையிலிருந்து அவன் வீடு திரும்பியதும் தன் உடைகளை மாற்றிக் கொண்டு இருக்கையில் அமர்ந்துகொண்டு விஷ்ணு சகஸ்ரநாமம் ஜெபித்தான். அப்பொழுது அவன் வேஷ்டிக் க்ட்டிக் கொண்டு இருந்தான். அவன் வீட்டிற்கு வந்த நண்பன் அலுவலகத்துக்குச் செல்லும்போது அப்படிஉடை உடுத்திக் கொண்டு சென்றது பொருத்தம்தான். அதே போல் நீ வீட்டில் ஜபம் செய்யும் போது இவ்வாறு வேஷ்டி கட்டிக்கொண்டு உன்னை வீட்டில் பார்த்தால் எனக்குப் பிடித்திருக்கிறது என்றான்.

ஒருவன் பலவித ஆடைகளை உடுத்திக் கொள்வதன் மூலம் பல பேரை சந்தோஷப்படுகிறார் அதே போல் இறைவன் உருவமற்று இருந்தாலும் பக்தர்களுக்காக பல்வேறு உருவங்களில் வந்து காட்சியளிக்கிறார்.

எண்ணற்ற அவதாரங்களை பற்றி நமது புராணங்கள் கூறுகின்றன சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட சிவன் விஷ்ணு தெய்வங்களுக்கு நிச்சயம் பல தாத்பர்யங்கள் உள்ளன சிவனுக்கு பத்து கைகள் உண்டு மேற்கு கிழக்கு தெற்கு வடக்கு போன்ற 8 திசைகளோடு மேல் கீழ் திசைகளையும் சேர்த்தால் 10 திசைகள் ஆகின்றன அல்லவா?

இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்பதைத்தான் பத்து கைகள் எடுத்துக்காட்டுகின்றன. சிவனுக்கு மூன்று கண்கள் என்பதை நன்கறிவோம் சூரியன் சந்திரன் மற்றும் நெருப்பு ஆகிய மூன்று கண்களும், தலைமுடியுல் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார் சந்திரன் ஞானத்தைக் குறிக்கும் சந்திரனும் அவர் தனது ஜடாமுடியில் அணிந்திருப்பதன் மூலம் தான் பரிசுத்தமான ஞான ஸ்வரூபம் என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

இறைவன் எல்லாம் அறிந்தவன் எல்லாம் வல்லவர் எங்கும் நிறைந்தவர் இப்பிரபஞ்சத்தில் அவரை தவிர வேறு ஒன்றுமில்லை என்ற பொதுவான ஒரு கருத்தைத் தான் நமது புராணங்களின் விளக்கங்கள் பிரதிபலிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.