நிவேதனம் செய்வது என்பது.. ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
abinav vidhya theerthar

ஒருவர் நிதமும் இறைவனுக்கு பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பூஜையில் இறைவனுக்கு பலவித தின்பண்டங்களை படைத்து நைவேத்தியம் செய்து வந்தார்.

பூஜை முடிந்த பிறகு பழங்களீல் ஒன்றை எடுத்து இறைவனை பிரசாதமாகக் கருதி சாப்பிடுவார். ஸ்ருஷ்டி பற்றியும் கடவுளைப் பற்றியும் அறிந்து கொள்வது என்பது இயலாதது என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஒருவர் இவருக்கு நண்பனாக இருந்தார்

இந்த பக்தனிடம் குடிபோதையில் நீவீர் செய்யும் நெய்வேத்தியம் முட்டாள்தனமானது இறைவனின் முன்பு நீவீர் கிடைக்கும் பழங்கள் அப்படியே வைத்த இடத்திலேயே இருக்கின்றன அவை பார்ப்பதற்கு எந்த மாறுதலும் அடையவில்லை.

இறைவன் உண்டது போக மீதி சாப்பிடுகிறேன் என கூறுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை என்றார்

krishnar

பூஜை செய்யும் பக்தரோ தன் நண்பனை பார்த்து கீதையில் கிருஷ்ணர் அளித்த வாக்குறுதிப்படி அவர் நிச்சயமாக ஏற்றுக் கொள்கிறார் என்ற நம்பிக்கையுடன் இறைவனுக்கு படைக்கிறோம். ஒருவர் ஒன்றை ஏற்றுக்கொண்ட பிறகு அவர் இஷ்டம்போல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

அதிலும் இறைவன் சர்வ சக்தனாக இருப்பதால் பழத்தை மறையச் செய்யவும் அல்லது தாம் உண்ட பிறகு பழத்தை முழுமையாக மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டுச் செல்லவும் அவருக்கு இயலும் இது அவருக்கு சாத்தியமானது அதனை மனித சக்தியால் புரிந்து கொள்ள முடியாது

அவர் நாவல் பழத்தைச் சாப்பிட்டு விட்டு மீதியை நான் சாப்பிடுவதற்காக வைத்திருக்கிறார் என்றே நான் உறுதியுடன் நம்புகிறேன் என்னைப் பொறுத்தவரையில் இறைவன் சாப்பிட்ட மிச்சத்தை தான் நான் உண்ணுகிறேன். இதனை புரிந்து கொள்ளாமல் நீங்கள் பேசுவது கண்டு வேதனைப்படுகிறேன்.

nyvethiyam

சமீபத்தில் தங்களது அபிமான அரசியல் கட்சித் தலைவர் ஊருக்கு வந்தார் அப்பொழுது நீங்களும் மற்றவர்களும் சேர்ந்து அவருக்கு பல மாலைகளை கொடுத்து வரவேற்று சந்தோஷப்படுத்தினீர்கள். நீங்கள் கொடுத்த எல்லாம் மாலையையும் அவர் அணீயவில்லை. அணியவும் முடியாது பெற்றுக்கொண்ட மாலைகளில் ஒன்றை அவர் பக்கத்தில் இருக்கும் தங்களுக்கு வழங்கினார் நீங்கள் அதை சந்தோஷமாக வாங்கிக் கொண்டீர்கள்

அங்கே வந்திருந்த தனது ஆதரவாளர்களையும் கூட்டத்தின் நடுவில் அவர் நடந்து செல்லும் போது தன் கையில் இருந்த மாலையை அவர் அக்கூட்டத்தில் வீசி எறிந்தார் அதைக்கண்டு மக்களும் ஆரவாரம் செய்து சந்தோஷப்பட்டார்கள். அவர்களுள் ஒரு ஆதரவாளர் கொடுத்த மாலையே மீண்டும் தன் கையில் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. தனக்களித்த மாலைகளை அவர் தம் இடத்திலேயே வைத்துக் கொண்டு இருப்பதில்லை என்பதை அறிந்தும் கூட நீங்கள் அவருக்கு மாலை இடுவதை நிறுத்துவதில்லை.

nyvethyam

அவருக்கு மரியாதை செலுத்துவதாக நீங்கள் ஆனந்தம் அடைகிறேர்கள் நீங்கள் அளிக்கும் மாலைகளை வாங்கிக் கொண்டு அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவரிடம் நீங்கள் கூறுவது இல்லை இப்படி இருக்கையில் நான் அந்த இறைவனுக்கு பழங்களைப் படைத்து சந்தோஷப்படுவது கண்டு ஏன் நீங்கள் கஷ்டபடுகிறீர்கள்.

தவிரவும் உங்களுடைய தலைவர் நீ கொடுத்த மாலையை உங்களுக்குத் திருப்பித் தரலாம் என்றால், இறைவனுக்கு நான் படைத்த பழங்களை தம்முடைய ஆசிகளோடு மீண்டும் அவர் எனக்கு திருப்பித் தருவதற்கு அவருக்கு சுதந்திரம் இல்லையா? உண்மையில் ஒரு கர்மயோகி இறைவனுக்கு தின்பண்டங்களை மட்டுமின்றி தன்னுடைய எண்ணங்களையும் வாக்குகளையும் மற்ற செயல்களையும் நைவேத்தியம் செய்கின்றார் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.