பொறாமையின் எழுச்சியும், வீழ்ச்சியும்: ஆச்சாரியாள் அருளமுதம்!

Published:

abinav vidhya theerthar

பல்லாண்டுகளுக்கு முன் இந்தியா அதிக பொருளாதார வளர்ச்சி அடையாமல் இருந்த காலகட்டத்தில் சாலைகளில் கார்களை காண்பது மிகவும் அரிதானது ஒரு செல்வந்தன் விசாலமான ஒரு காரை சொந்தமாக வைத்திருந்தார் செல்வந்தன் தினமும் காலையில் அலுவலகத்திற்கு செல்வதற்கு தனது காரில் தான் சென்று வருவான் மாலையில் கடற்கரை சாலை வழியாக வந்த காரை ஓட்டிக் கொண்டு செல்வான் பாதசாரிகள் பணக்காரனை பார்த்து பொறாமை பட்டனர்.

அந்த கார் என்னிடம் இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள் அந்த கார் ஒரு நாள் ஒரு லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் அதில் இருந்தவர் காரினுள் மாட்டிக் கொண்டு விட்டார்

பணக்காரனை கஷ்டப்பட்டு வெளியே எடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார்கள் துரதிஷ்டவசமாக அவனுடைய இரண்டு கால்களும் மோசமாக சேதமடைந்ததால் முழங்காலுக்கு கீழே அவற்றை வெட்டி எடுத்து விட்டார்கள்

தீவிர சிகிச்சைக்கு பின் அவனால் நடக்க முடியாததால் அவனது பணியாட்கள் அவனை தூக்கி கொண்டு சென்றார்கள் பரிதாபமான நிலையை கண்ட பாதசாரிகள் என்ன கொடுமை நல்லவேளையாக நம்மிடம் கார் இல்லை அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் நடந்து செல்வதுதான் பாதுகாப்பானது என்று தங்களுக்குள் கூறிக்கொண்டார்கள்

பொறாமை என்னும் தீய குணம் மனித உள்ளங்களில் எப்படி மேலே எழும்புகிறது என்றும் எப்படி பிறகு அது அடங்கி விடுகிறது என்றும் அதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.08 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

ஒரு பொருளை ஒருவன் அடைந்து இருப்பதினாலேயே அவன் அதனால் சந்தோஷத்தை அடைந்துவிட முடியாது இத்தகைய எண்ணம் பொறாமையை அகற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும்.

Related articles

Recent articles

spot_img