images 60 - 2026

இன்று சனி பிரதோஷம்: சதுரகிரியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு..

ஆன்மிகம் ஆலயங்கள் தமிழகம் விழாக்கள் விசேஷங்கள்
images 60 - 2026

இன்று சனி பிரதோஷம்: சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்து.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர் இன்று முதல் வரும் மார்ச் 8-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர லிங்கம், சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி மாசி மாத பவுர்ணமி மற்றும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு இன்று (4-ந் தேதி) முதல் 8-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலைஏற வனத்துறை அனுமதி அளித்திருந்தது. இன்று சனிபிரதோ ஷத்தை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின்

பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கானோர் அதிகாலையிலேயே மலையடிவாரமான தாணிபாறையில் குவிந்தனர்.

காலை 7 மணிக்கு பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர். 10 வயதிற்குட்பட்ட வர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது.

பக்தர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன் பைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். சனிபிரதோஷத்தை முன்னிட்டு மலைமேல் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

வரும்

8-ந் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம். 10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகம் இருந்தாலோ மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அமாவாசை, பௌர்ணமி நாட்களை சதுரகிரிக்கு பக்தர்களுக்கு 4 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுவார்கள். ஆனால் இந்த முறை 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.