ஜுலை 2ல் துவங்குகிறது அமர்நாத் யாத்திரை

ஆன்மிகச் செய்திகள்

Amarnath-yatra புது தில்லி அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ஜூலை 2, 2015 அன்று துவங்கி ஆகஸ்ட் 29, 2015 அன்று நிறைவு பெறும். பல்தல் மற்றும் பகல்காம் வழியாக இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும். இந்த யாத்திரை மேற்கொள்ள பதிவு அவசியமாகும். யாத்திரைக்கான அனுமதி இல்லாமல் இதனை மேற்கொள்ள முடியாது. யாத்திரைக்கான அனுமதியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு வங்கி கிளைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். (ஜம்மு-காஷ்மீர் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் எஸ் வங்கி). பதிவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் முகவரி ஸ்ரீ அமர்நாத்ஜி திருத்தலம் வாரியத்தின் இணைய தளமான www.shriamarnathjishrine.com. பெற்றுக்கொள்ளலாம். மார்ச் 1, 2015 முதல் இந்த யாத்திரைக்கான பதிவு தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மூலம் துவங்கும். யாத்திரைக்கான அனுமதியை பெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்/ சிறந்த தனியார் மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழும் விண்ணப்பத்தையும் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சுகாதார சான்றிதழை வழங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள மாநில வாரியான மருத்துவர்களின் பட்டியல் / சிறந்த தனியார் மருத்துவ நிறுவனத்தின் பட்டியல் மற்றும் அதற்கான மாதிரியையும் www.shriamarnathjishrine.com. என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். பிப்ரவரி 10, 2015க்கு பிறகு வழங்கப்பட்டுள்ள கட்டாய சுகாதார சன்றிதழே மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். யாத்திரை மேற்கொள்ள உள்ள நபர் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மூலம் ரூ.50 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். யாத்திரைக் குறித்த மேலும் விவரங்களுக்கு www.shriamarnathjishrine.com. என்ற இணையதளத்தை அணுகலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.