“பொய்யும் பயமும்”

Published:

ஒரு தப்பு செய்த போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இந்த வார கல்கி. அது ஓர் அழுக்கு மாதிரி உங்கள் மனசையே உறுத்துகிறது. உடனே இந்த அழுக்கை யாரும் தெரிந்து கொண்டு விடக்கூடாது என்று அதை மூடி மறைக்க தோன்றுகிறது. நியாயமாக தவறுதல் உண்டானவுடன் பிரார்த்தனை பண்ணினால் அந்த பிரார்த்தனையே சோப்பை போல் அந்த தப்பை அகற்றிவிடும். அப்படி செய்யாமல் தப்பை மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமல் மூட வேண்டும் என்கிறபோது பொய்ய சொல்ல வேண்டியதாகிறது. அழுக்கை தேய்த்து கழுவாமல் மூடி மூடி வைத்தால் சீழ் பிடித்து சிரங்காகிவிடுகிறது. உள்ளத்தை ரொம்பவும் கெடுக்கிற பயங்கரமான சிரங்கு பொய் தான். எதனால் தப்பை மறைக்க பார்க்கிறோம்? ஒன்று நம்மை மற்றவர்கள் நல்லவன் என்றே நினைக்க வேண்டும் என்ற பொய் எண்ணத்தினால் அல்லது இன்னொருத்தரிடம் பயத்தினால் மறைக்கப்பார்க்கிறோம். பொய் என்பது சிரங்கு என்றால் பயம் என்பது சொறி மாதிரி. பெரியவர்களிடமெல்லாம் உங்களுக்கு நிறைந்த மரியாதையும் மதிப்பும் இருக்கத்தான் வேண்டும். ஆனாலும் அர்த்தமில்லாத பயம் கூடாது. பயம் உள்ளத் தூய்மையை கெடுக்கிற அழுக்கு. தப்பு செய்வதால் கூட அதை உணர்ந்து பணிவுடன் உள்ளபடி பெரியவர்களிடம் சொல்ல வேண்டுமே ஒழிய பொய்யால் மூடி மறைக்க கூடாது. தப்பு செய்தது போதாது என்று பொய்யும் சொன்னோம் என்பது வெளிப்பட்டு நமக்கு மேலும் அவமானம், கஷ்டம் தான் ஏற்படும். உள்ளப்படி சொன்னால் பெரியவர்கள் மன்னித்து விடுவார்கள். மன்னிக்காமல் அவர்கள் தண்டித்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு அந்த உரிமை உண்டு. நாம் தப்பு செய்தோம். அதனால் அதற்குரிய தண்டனையை பெறுகிறோம் என்று தைரியத்துடன் தண்டனையை ஏற்க வேண்டும். தைரியம், சத்தியம் இவை எல்லாம் மனஅழுக்கை போக்குகிற சோப், சீயக்காய் மாதிரி. ஜத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகராந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வமிகள்734324_514749501889171_935875765_n

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Related articles

Recent articles

spot_img