மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் குழந்தைகள், முதியோர் அனுமதி! நாளை முதல் மாலை, பூ அனுமதி!

ஆலயங்கள் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை
meenakshi kovil
meenakshi kovil

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று முதல் குழந்தைகள் மற்றும் முதியோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கொரோனா பரவல் காரணமாக 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும், 60 வயதுக்கு மேற்ப்பட்ட முதியோர்களும் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் வெளியூர்களில் இருந்து வருவோர்கள் குழந்தைகளை கோவிலுக்குள் அழைத்து செல்ல இயலாமல் வெளியிலேயே விட்டு சென்று வந்தனர்.

இந்தநிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததை அடுத்து இன்று முதல் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பூஜை பொருட்கள் மற்றும் மாலை சுவாமிக்கு சாத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் மாலை பூ சுவாமிக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பூஜை பொருட்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது 5 கோபுரவாசலில்களில் அம்மன் சன்னதி வழியாக இலவச தரிசனத்திற்கு தெற்குக் கோபுரம் வழியாக ரூபாய் 100 கட்டணத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படு வரும் நிலையில் நாளை முதல் மீதமுள்ள கோபுர வாசல்கள் திறக்கப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்த்துள்ளது.

கிழக்கு கோபுரத்தை பொருத்தவரை தீவிபத்து ஏற்பட்டு அதன் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இன்று முதல் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். பக்தர்கள் ஆர்வமுடன் தங்களது குழந்தைகளோடு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.