குற்றாலநாதசுவாமி கோவிலில் நிகழ்ந்த தேரோட்டம்..

1068559 untitled 12 - 2026

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோவிலில் இன்று நடைபெற்ற திருவாதிரை தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவாதிரை திருவிழா கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 6-ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், சுவாமி – அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெற்று வருகின்றன. மேலும் காலை 9.30 மணி மற்றும் இரவு 7 மணிக்கு நடராஜப் பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. திருவிழாவின் 5-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 8.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேர், அதை தொடர்ந்து முருகன் தேர், பின்னர் நடராஜர் தேர், அதன் பிறகு குற்றாலநாத சுவாமி தேர், இறுதியாக குழல்வாய்மொழி அம்மை தேர் ஆகிய 5 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன.

இந்த 5 தேர்களும் ரத வீதிகளில் சுற்றி நிலையத்தை அடைந்தன. காலை 11 மணிக்கு தேரோட்டம் முடிவடைந்தது. இந்த விழாவில் தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிவபூதகனம் வாத்தியங்கள் முழங்க, முதலில் விநாயகர் தேரும், 2 -வதாக முருகன் எழுந்தருளிய தேரும், 3-வதாக நடராசர் எழுந்தருளிய தேரும், 4-வதாக குற்றாலநாதர் எழுந்தருளிய தேரும், 5-வதாக குழல்வாய்மொழி அம்மன் தேரும் ஒன்றன் பின் ஒன்றாக இழுக்கப்பட்டதை புத்தாண்டு நாளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து பலரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை) 8-ம் திருநாள் அன்று காலை 9-மணிக்கு சித்திரை சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 6-ம் தேதி 10-ம் திருநாள் அன்று அதிகாலை 4 மணிக்கு சித்திரை சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து, அதே தினத்தில் காலை 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

1500x900 1815473 tenkasi ther - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories