தென்காசி மதுரை சாலையில் வேனும் காரும் மோதி விபத்து! 5 பேர் உயிரிழந்தனர்!

தமிழகம் பொது தகவல்கள்
madhurai - 2026

ராஜபாளையம்-தென்காசி சாலையில் வேன், கார் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

ராஜபாளையம்-தென்காசி சாலையில் கடம்பன்குளம் கண்மாய் வளைவில் திங்கள்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் வேனும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

மதுரை மேலூரில் இருந்து திருமண வீட்டார் சென்ற வேனும் குற்றாலத்திலிருந்து சிவகாசி நோக்கி வந்த காரும் மோதியதில், காரில் வந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மதுரை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சிவகாசியைச் சேர்ந்த சுடலைமணி (31), ஐயப்பன் (33), முத்துக்குமார் (31), அந்தோணிராஜ் (30), பிரபு (29) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.