spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeதமிழகம்நாளை கடைசி! விண்ணப்பித்து விட்டீர்களா?

நாளை கடைசி! விண்ணப்பித்து விட்டீர்களா?

- Advertisement -
jobs

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தற்போது இரண்டு விதமான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எம்.சி முடித்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (டிஎன்பிஎஸ்சி) மீன்வளம் மற்றும் தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி இயக்குனர் -மீன்வளத்துறை பணிக்கானத் தகுதிகள் ( Assistant Director of fisheries)

காலிப்பணியிடங்கள் – 2
வயது வரம்பு – விண்ணப்பத்தாரர்கள் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆனால் SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு எந்தவித வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.F.Sc., Degree (or) A Doctorate in Zoology or Marine Biology (or) M.Sc.,(Bio-Technology) with a basic B.F.Sc.,Degree (or) A first class degree in M.A/M.Sc., in Zoology or Marine Biology முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் – ரூ.56,100 – 1,77,500 என நிர்ணயம்
வேதியியலாளர் (Chemist in Industries and Commerce Department) பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் – 3
வயது வரம்பு- விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆனால் SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in M.Sc., in Chemistry or Chemical Technology or Industrial Chemistry முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.37,700 – 1,19,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், https://www.tnpsc.gov.in/ அல்லது https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளப்பக்கத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:
மீன்வளத்துறை உதவி இயக்குனர் பணிக்கு ஜனவரி 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேதியியலாளர் பணிக்கு வருகின்ற ஜனவரி 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் ரூ. 150 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். ஏற்கனவே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும்.

முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இரண்டாம் தாளில் தமிழ் மொழித் தகுதித்தேர்வு மற்றும் பொது அறிவு வினாக்கள் இடம் பெற்றிருக்கும்.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.tnpsc.gov.in/Document/english/20_2021_AD_FISHERIES_ENG.pdf மற்றும் https://www.tnpsc.gov.in/Document/english/21_2021_CHEMIST_ENGLISH.pdf ஆகிய இணையதளப்பக்கத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe