ஏப்ரல் 21, 2021, 4:59 மணி புதன்கிழமை
More

  உஷார்! வாட்ஸ்அப் மூலம் உங்களை ஏமாற்றும் ஹேக்கர்கள்!

  குறிப்பாக, Whatsapp OTP scam என்று அழைக்கப்படும் இந்தப் புதிய மோசடியின்படி, உங்கள் வாட்ஸ்அப்

  whatsapp spy
  whatsapp spy

  உங்கள் வாட்ஸ்அப் செயலிக்கு உங்கள் நண்பரிடம் இருந்து வரும் தகவல் போல் அனுப்பி, அதன் மூலம் மோசடிகளில் ஈடுபடும் ஹேக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இது ஒரு டெக்னிகல் சமாசாரம் தான். ஆனால் இது புரிபடுவதற்குள் நாம் பெரிதும் ஏமாற்றப் பட்டிருப்போம்.

  வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. வாட்ஸ்அப் செயலி, வெறும் ஒரு மெசேஜிங் செயலியாக மட்டுமின்றி ஒரு மல்டிமீடியா ஷேரிங் செயலியாகவும் செயல்பட்டு வருகிறது. இப்போது வாட்ஸ் அப் பேமெண்ட் மூலம், பணம் அனுப்பும் வழிமுறைகள் கூட வந்துவிட்டன.

  இப்படி குறுகிய காலத்தில் மிகப் பிரபலமான வாட்ஸ்அப் செயலியை தற்பொழுது ஹேக்கர்கள் குறி வைத்து தங்களது மோசடிகளை அரங்கேற்றுகின்றனர்.

  அண்மைக்காலமாக வாட்ஸ்அப் தொடர்பான முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, Whatsapp OTP scam என்று அழைக்கப்படும் இந்தப் புதிய மோசடியின்படி, உங்கள் வாட்ஸ்அப் காண்டாக்ட்டில் இருக்கும் உங்களுடைய நண்பர் என்று கூறி, அவரின் வாட்ஸ்அப் எண்ணிலிருந்தே ஹேக்கர்கள் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்.

  இது எப்படி சாத்தியம்? என்று நீங்கள் நினைக்கலாம்! இதைச் செய்ய ஹேக்கர்கள் (Hackers) முதலில் உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்திருப்பார்கள். அதன் மூலம் உங்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி, ஹேக்கர்கள் இயங்குவார்கள்.

  உங்களிடம் சிறிய உதவி என்று பேச்சைத் தொடங்கி சைலெண்டாக விலை குறைப்பை அறிவித்த ஒப்போ நிறுவனம்.. ஒப்போ ஏ 33 வாங்க சரியான நேரம் இதானா? உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP தவறுதலாக பார்வர்ட் செய்யப்பட்டுள்ளது. அதை அவருக்குத் திருப்பி அனுப்புங்கள் என்று, உங்கள் நண்பரைப்போல், ஹேக்கர்கள் உங்களிடம் வாட்ஸ்அப் செய்தி அனுப்புவர்.

  ஹேக்கர்கள் என்பது தெரியாமல் நீங்களும் உங்கள் நண்பர் தான் மெசேஜ் செய்வதாக நினைத்து உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை அனுப்பி வைப்பீர்கள். நீங்கள் அனுப்பும் OTP எண்ணை வைத்துத் தான் ஹேக்கர்கள் OTP சரிபார்ப்பு மூலம் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்வார்கள்.

  அவர்களுக்கு உங்கள் OTP கிடைத்த சில நிமிடங்களில் நீங்கள் உங்களின் வாட்ஸ்அப் அகௌண்டிலிருந்து லாக் அவுட் செய்யப்படுவீர்கள்.

  இதை அடுத்து உங்களின் வாட்ஸ்அப் மெசேஜ்கள், காண்டாக்ட் விவரங்கள் மற்றும் பேக்கப் செய்யப்பட்ட அனைத்து தகவலுக்கும் ஹேக்கர்களுக்கு கிடைத்துவிடும். அதன் பின் உங்கள் வாட்ஸ்அப் எண்ணில் இருக்கும் நண்பர்களிடம் உங்களைப் போல் நடித்து, உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பண உதவி கேட்பது, பெண் நண்பர்களிடம் தவறாகப் பேசுவது என்று பலவிதமான சிக்கல்களில் உங்களைச் சிக்க வைப்பர்.

  அதன் பின்னர் அவர்களையும் ஏமாற்றி இந்த நாச வேலையை ஒரு தொடர் சங்கிலி போல எடுத்துச் செல்வார்கள். இந்த வகை மோசடியில் சிக்காமல் இருக்க two factor வெரிஃபிகேஷன் மெத்தட், என்பதை உங்கள் வாட்ஸ் அப்பில் பயன்படுத்துங்கள்.

  இந்த மாதிரியான மோசடிகளில் நீங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, உங்கள் மொபைலுக்கு வரும் எந்த ஒரு OTP எண்ணையும் எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஓடிபி என்பது மிகவும் ரகசியம் காக்கப் படவேண்டிய ஒரு சாவி போன்றது. சாவியை திருடன் கையிலேயே கொடுத்துவிட்டால், அவர்களால் பூட்டைத் திறப்பது எளிது!

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »