சுபாஷிதம்: நாட்டு நலனே முக்கியம்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

44. நாட்டு நலனே முக்கியம்!

செய்யுள்:

த்வேஷ்யோ பி சம்மத: சிஷ்டஸ்தஸ்யார்தஸ்ய யதௌஷதம் |
த்யாஜ்யோ துஷ்ட: ப்ரியோப்ராசீதங்குளீவோரகக்ஷதா ||

— ரகுவம்சம்.

பொருள்:

உடல்நலம் சரியாவதற்காக  கசப்பான மருந்தானாலும் எப்படி உட்கொள்ளுவோமோ அதேபோல் எதிரி ஆனாலும் நல்ல குணம் உள்ளவனானால் அவனை ஆதரிக்க வேண்டும். அதேபோல் நமக்குப் பிடித்த மனிதர் தீய குணம் உள்ளவனானால் பாம்புக் கடிக்கு ஆளான கைவிரலை துண்டித்துக் கொள்வது போல அவனை விலக்கி விடவேண்டும்.

விளக்கம்:

மகாகவி காளிதாசர் ரகுவம்சத்தில் திலீப சக்கரவர்த்தியின் குணநலன்களை விவரிக்கையில் கூறிய சுலோகம் இது.

நாட்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நற்குணம், நிபுணத்துவம் கொண்டவர்கள் அனைவரையும் ஆதரிக்க வேண்டும். நாட்டு நலனுக்கு கேடு விளைவிப்பவர் நண்பன் ஆனாலும் தண்டிக்க வேண்டும் என்பது கருத்து.

ALSO READ:  ஆதிசங்கரரின் சதச்லோகி - எளிய விளக்கம்!

உவமான அணி கொண்டு தன் தனித்துவத்தைக் காட்டும் காளிதாசரின் கவிதை இன்பத்தை இந்த ஸ்லோகத்தில் அனுபவிக்கலாம்.

சமுதாய நலனும் நாட்டு நலனும் முக்கியமானவை. அதற்கு பின்னர்தான் நண்பனும் பகைவனும். அனைவரையும் ஒன்று சேர்த்துச் செல்லும் திறன் தலைமைப் பண்புகளில் ஒன்று. நாட்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆர்வம், திறமை உள்ளவர்களை சேர்த்துக் கொள்வது சிறந்த தலைவர்களின் இயல்பு.

சாணக்கியர் தன் சாமர்த்தியத்தால் சந்திர குப்தனை சக்கரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்வித்தார். பின்னர், பகைவனோடு சேர்ந்து அப்போது வரை சாணக்கியருக்குப்  பிரச்சனையாக இருந்த நந்த அரசர்களின் முதலமைச்சரான ராட்சச மந்திரியை சந்திரகுப்தனுக்கு முதலமைச்சராக நியமித்தார். நண்பனாக இல்லாவிட்டாலும் அந்த மனிதரின் சாமர்த்தியம் நாட்டுக்குப் பயன்படும் என்பதால் அவ்விதம் செய்தார்.

பிவி நரசிம்மராவு பிரதமராக இருந்த போது ஐநா சபையில் காஷ்மீர் குறித்து இந்தியாவின் குரலை ஒலிக்கச் செய்வதற்கு அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அடல் பிகாரி வாஜ்பேயியை நியமித்தார். அச்செயல் இருவருக்கும் புகழ் சேர்ப்பதாக இருந்தது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories