விஜய் கை விடும் இயக்குனர்களுகு வாய்ப்பு தரும் சூர்யா… காரணம் என்ன?…

சினி நியூஸ் சினிமா

தமிழ் சினிமாவில் ரஜினி-கமல், விஜய் – அஜித் நடிகர்களுக்கு பிறகு வருபவர் சூர்யா. இவர் நடித்து சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகராக மாற்றியுள்ளது.

சூர்யாவிற்கு ஒரு பழக்கம் உண்டு. அஜித் மற்றும் விஜய் நிராகரிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து அவர் நடிப்பதுண்டு. அவை வெற்றிப்படமாகவும் மாறுவதுண்டு.

முருகதாஸ் இயக்கத்தில் உருவான கஜினி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அஜித். ஆனால், அவர் விலகிவிட அவருக்கு பதில் நடித்தவர்தான் சூர்யா. அப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

அதேபோல், கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க விருந்த கதையில் சற்று மாற்றம் செய்து துருவ நட்சத்திரமாக மாறிய போது அதில் சூர்யாதான் நடிக்கவிருந்தார். ஆனால், கவுதம் மேனன் எடுத்துக்கொண்ட தாமதத்தால் சூர்யா விலகினார். பின் விக்ரம் நடித்தார். ஆனால், படம் 75 சதவீதம் எடுக்கப்பட்டு நிற்கிறது.

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். அந்த கதை விஜய்க்குதான் சொல்லப்பட்டது. ஆனால், விஜய் விலகி விட தற்போது சூர்யா நடிக்கவுள்ளார். அதேபோல், தளபதி 65 படத்தில் இருந்து எ.ஆர்.முருகதாஸ் விலகி விட, அவரை சூர்யா அழைத்து ‘நாம் இணைந்து ஒரு படம் செய்வோம்’ என அழைப்பு விடுத்துள்ளாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.