தொடர் காதல் தோல்விகளுக்கு பின்பும் வெற்றிக்கொடி நாட்டிய நயன்தாரா.. இதுதான் காரணமாம்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா

தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாரா அதன்பின் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். கஜினி படத்தில் கூட துக்கடா வேடத்தில்தான் நடித்தார். அப்போது வரை கூட அவர் முன்னணி நடிகை ஆகவில்லை. அதோடு, சிம்புவுடன் காதல் ஏற்பட்டு பின் அதை முறித்துக்கொண்டார். பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை சென்றார். ஆனால், அதிலும் அவருக்கு தோல்வியே.

தோல்விகள் ஒருவரை நிலை குலைய வைக்கும். ஆனால், தொடர் தோல்விகளை நயன்தாரா தனது வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டார். உடல் எடையை குறைத்து அழகாக மாறினார். யாரடி நீ மோகினி படத்தில் அவரின் தோற்றம் பல இயக்குனர்களுக்கும் தன் படத்தில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது.. அதன் பின் ராஜா ராணி படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகையாக மாற்றியது. ஒருபக்கம் மாயா, அறம், கோலமாவு கோகிலா, நானும் ரவுடிதான், இமைக்கா நொடிகள் போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அவருக்கென ரசிகர் கூட்டமே உண்டானது.

nayan2
nayan2

விக்னேஷ் சிவனை காதலித்து தற்போது அந்த காதல் ஜோடி வெற்றிகரமாக நடை போட்டு வருகின்றனர்.

நம்மை பற்றி யார் என்ன பேசினாலும் நமது குறிக்கொள்ளை நோக்கி நாம் சென்று கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு நயன்தாராவே சாட்சியாக நிற்கிறார். இதுதான் அவரை லேடி சூப்பர்ஸ்டாராக மாற்றியுள்ளது. தமிழ் சினிமா நடிகைகள் அவர் நம்பர் ஒன் இடத்தில் நீடித்து நிற்கிறார்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.