தமிழ் திரையுலகின் வேலைநிறுத்தம் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளதால் இந்த வாரம் வெள்ளி முதல் திரைப்படங்கள் ரிலீஸ் தொடங்குகின்றன. ஆனால் சென்சார் ஆகி சுமார் 30 படங்கள் ரிலீசுக்கு தயாராக இருப்பதால் இந்த படங்களை எந்த வரிசையில் ரிலீஸ் செய்வது என்ற சிக்கல் எழுந்துள்ளது. இதனையடுத்து சென்சார் ஆன தேதியின் வரிசைப்படி படங்கள் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
காலா, விஸ்வரூபம் 2, இரும்புத்திரை, ‘இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, மெர்க்குரி, மிஸ்டர் சந்திரமௌலி, மோகினி, கரு, டிக் டிக் டிக், நரகாசூரன், இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், அசுரவதம், காளி, பரியேறும் பெருமாள், ஆண் தேவதை, அபியும் அனுவும், களரி, காத்திருப்போர் பட்டியல், கோலி சோடா 2, கீ, இரவுக்கு ஆயிரம் கண்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல், சர்வர் சுந்தரம், குப்பத்து ராஜா, ஆர்.கே.நகர், பார்ட்டி, கடைக்குட்டி சிங்கம், தமிழ்ப் படம் 2.0, ஆகிய படங்கள் சென்சார் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன.
வாரம் மூன்று படங்கள் என்ற அடிப்படையில் இந்த படங்கள் ரிலீஸ் ஆகும் என்றும் இந்த வாரம் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி உள்பட 3 படங்கள் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது



