பிஎஸ்எல்வி.,- சி 44 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது!

நாட்டின் எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்கும் செயற்கைக்கோளை, பிஎஸ்எல்வி., – சி 44 ராக்கெட் உதவியுடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ இன்று விண்ணில் செலுத்துகிறது.

புவி அமைப்பு மற்றும் நாட்டின் எல்லைப் பகுதிகளை கண்காணிக்க ‘மைக்ரோசாட் – ஆர்’ என்ற இமேஜிங் செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது.

இதனுடன் மாணவர்கள் உருவாக்கியுள்ள ‘கலாம்சாட்’ என்ற, குறைந்த எடை உடைய செயற்கைக்கோளையும் சுமந்தபடி ‘பிஎஸ்எல்வி., – சி 44’ ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று இரவு 11:40 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுன்ட் – டவுன் நேற்றிரவு துவங்கியது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.