இறைவனை வழிபாடுகள் செய்கிறோம். வழிபாட்டின் நோக்கம் என்ன? நாம் விரும்பியது வரனும், நினைத்தது நடக்கனும். நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம், நாமும் நமக்கு வேண்டியவர்களும் சந்தோஷ வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பிரார்த்தனை செய்கிறோம்.
அர்ச்சனை செய்யலாம், விளக்கேற்றலாம். அன்ன அர்ச்சனை, அல்லது அந்தந்த ஆலயங்களில் செய்யப்படும் பரிகார முறைகளை பின்பற்றலாம். இதெல்லாம் ஆகம ரீதியிலான வழிபாடுகள். ஆத்மார்த்தமான வழிபாடுகள். நம் கோரிக்கைகளை மனதிற்குள் நினைத்து வழிபாடு செய்வது. வழிபாட்டில் இது நேர்மறை வழிபாடுகள் என்று பெயர். இதே வழிபாட்டில் எதிர்மறை வழிபாடு என்ற ஒன்று இருக்கிறது.
வழிபாடுகளை தவறாக செய்வது. உதாரணமாக சிவனுக்கு பன்றி கரி படைத்த கண்ணப்ப நாயனார், அறியாமையால் செய்த வழிபாடாக இருந்தாலும், அதை சிவன் மனம் உகந்து ஏற்றுக் கொண்டாலும், வழிபாட்டில் இது எதிர்மறை வழிபாடு என்று பெயர்.
ஆனால் வழிபாட்டில் மந்திரம், யந்திரம், தந்திரம் என்கிற ஒன்று இருக்கிறது. மந்திரம்னா தெரியும், பூஜைக்கு உரிய மந்திரங்கள், நாமாவளிகள் சொல்லி வழிபாடு செய்வது, யந்திரம் என்பது இறைவனின் சூட்சும உருவங்கள். யந்திரங்களுக்கு முன்னால் அமர்ந்து மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்வது. இதற்கு அடுத்து ஒன்று இருக்கிறது அதுதான் தந்திரம். இந்த தந்திரத்தை கடைபிடித்தால் நம் பிரார்த்தனையின் பலனை விரைவாகவும், முழுமையாகவும் பெறலாம். இந்த தந்திரம் என்பது இறைவனை வசியம் செய்வது.
செல்வம் நிலைக்க வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருக!
Popular Categories


