பயிற்சியாளர் செய்த வேலை ! பதபதைக்கும் காணொளிக் காட்சிகள் !

உலகம் பொது தகவல்கள்

horse - 2026இங்கிலாந்தில் படுத்தபடி இருந்த குதிரையின் கழுத்தை கயிற்றால் கட்டி தரதரவென இழுத்துச் சென்று அதன் முகத்தில் உதைக்கும்  காட்சிகள் வெளியாகியுள்ளன.மனதை உலுக்கும் இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் பெருத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டிங்காமில் சுற்றுலாப் பயணிகளுக்கான முகாம் அமைக்கு இடத்தில் குதிரை கனைக்கும் சத்தம் கேட்டகவும், அதனைத் தொடர்ந்து எதிர்வீட்டில் இருந்து ஜன்னல் வழியே ஒருவர் வெளியேப்பார்த்தார்.

ஒருவர்  விலங்குகளை துன்புறுத்திக் கொண்டிருந்த நிலையை கண்ட  அவர் திடுக்கிட்டார். அதனை  படம் பிடித்து  விலங்குகள் நல வாரியத்துக்கும், காவல்துறைக்கும் அனுப்பி வைத்தார்.

சமூக வலைதளங்களில் வெளியான அந்த காட்சியில், பயிற்சியாளர் ஒருவன் படுத்திருக்கும் குதிரையை தரதரவென கொடூரமாக இழுத்துச் சென்றதோடு முகத்திலும் உதைக்கிறான்.காணொளி அடிப்படையில் நாட்டிங்காம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 thought on “பயிற்சியாளர் செய்த வேலை ! பதபதைக்கும் காணொளிக் காட்சிகள் !”

  1. அதே குதிரையை வைத்து அந்த ஆளின் முகத்தில் உதைக்க வைக்க வேண்டும். ஒன்றிரண்டு பல்லாவது உடைந்து வெளியில் விழ வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.