திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் திருக்கோயில் சுவாமிக்கு சந்தன லேபனத்திற்கு- சந்தன காப்பிற்கு “இயற்கை ஒரிஜினல் சந்தனம் “வழங்கிட இந்து தமிழர் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர், கோயில் தக்கார் ஆகியோருக்கு அளிக்கப் பட்டுள்ள கோரிக்கை மனுவில், திருச்செந்தூர் அருள்மிகு செந்தில் ஆண்டவர் சுவாமி மூலவருக்கு சந்தனக்கட்டை மூலமாக கிடைக்கப்பெறும் “தூய்மையான ஒரிஜினல் சந்தனம்” அரைத்து சாத்தப்பட வேண்டும் என்றும், இதற்குரிய வழிவகையை ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்றும் கோரப் பட்டுள்ளது.
இது குறித்து இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் தெரிவித்த போது, திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தமாதன பர்வத குகைக்குள் முருகன் உள்ளதால் குளிர்ச்சிக்கு முருகனுக்கு சந்தன காப்பு வேண்டுதல் மிகவும் விஷேசம். சுவாமிக்கு நித்யபடி – தினசரி சந்தனம் பழைய படித்தலப்படி 1.365 கிராம் அளவு சந்தனம் அரைத்து சாத்தப்பட்டு வந்தது. பின்னர் கலப்பட சந்தனம் சாத்தப்பட்ட காரணத்தால் பக்தர்களின் எதிர்ப்பால் தரமான சந்தனம் சாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் விளைவால் சந்தனகாப்பு சாத்துதலும் இடையில் நிறுத்தப்பட்டதாக
அறிய வருகிறோம்.
தற்பொழுது கொடுக்கும் சந்தனம் 400கிராம் கொடுக்கப்படுகிறது. பக்தர்களின் கோரிக்கை என்னவென்றால் ஒரிஜினல் சந்தனக்கட்டையை திருக்கோயில் அலுவலகத்தில் மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டால், உபயதாரர்கள்
ஒவ்வொரு சந்தன லேபனத்திற்க்கும்- சந்தன காப்பிற்கு ஒரு கிலோ சந்தனக் கட்டையை சந்தை விலைப்படி நிர்வாகத்தில் வாங்க சந்தன லேபன உபயதார்கள் தயாராக இருக்கிறார்கள் .
சந்தை விலையில் சந்தனம் கிடைத்தால் அதை கோவிலில் சந்தன அறையில் அரைத்து முருகனுக்கு சாத்தினால் ஒரிஜனல் -இயற்கை சந்தனத்தால் முருகன்
மனம் குளிர்வார். பக்தர்கள் மனம் குளிர்வார்கள். இது தொடர்பாக, கோரிக்கை மனுவினை அளித்துள்ளோம். அறநிலையத்துறை ஆவன செய்யும் என்று நம்புகிறோம் என்றார்.


