இந்தியாவோடு சேர்ந்த நாடுகள் மீதும் குண்டு வீசுவோம்! மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர்!

உலகம்
pak mini - 2026

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது குண்டு வீசப்படும் என பாகிஸ்தானின் காஷ்மீர் விவகாரத்துறை அமைச்சர் கில்கித் பல்திஸ்தான் அலி அமின் கந்தபூர், மிரட்டல் விடுக்கும் விதமாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் பேசிய விடியோப் பதிவை பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் நைலா இனியத் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் மோதல் போக்கு ஏற்பட்டால், போரிடுவதை தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை. எனவே, அந்த வேளையில் பாகிஸ்தானுக்கு பதில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் அனைத்தும் எங்கள் எதிரிகளாக கருதப்பட்டு, இந்தியாவுடன் சேர்த்து அந்த நாடுகளின் மீதும் குண்டு வீசப்படும் என்று அமைச்சர் கில்கித் பேசியுள்ளார்.

முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் ஏற்பட்டால் எது வேண்டுமானாலும் நடக்காலம் என அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இதேபோன்று மிரட்டல் விடுக்கும் விதமாக தனது உரையில் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.