ஓட்ஸ் பக்கோடா
தேவையானவை:
ஓட்ஸ் – ஒரு கப்,
கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கேரட், பீட்ரூட், வெங்காயம் எல்லாம் சேர்ந்து – கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
கேரட், பீட்ரூட், வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றுடன் ஓட்ஸ், கடலை மாவு சேர்த்து கெட்டியாகக் கலக்கவும். மாவை காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.