குழந்தையின் உணவுப் பொருளுக்குள் கிடந்த இரும்பு துண்டுகள்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்!

உலகம் கிரைம் நியூஸ் சற்றுமுன்
super-market

ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள Lockerbie என்னும் பகுதியை சேர்ந்த மோவெர்ன் ஸ்மித் (Morven Smith) என்கிற பெண் ஒருவர் தன் குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தபோது, உணவில் உலோகத் துகள்கள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த பெண் தனது கணவரிடமும் கூறுயுள்ளார். பின்னர் மீண்டும் வேறொரு புதிய உணவு ஜாரை திறக்க அதற்குள்ளும் உலோகத் துகள்கள் கிடப்பதைக் கண்ட Morven-ன் கணவர் Harpreet-க்கு அதிர்ச்சி, அந்த உணவை குழந்தைக்கு ஊட்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

baby-food

இது பற்றி உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு புகார் அளித்தனர். அதே சமயத்தில் குறிப்பிட்ட உணவு தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான ஆறு உணவு ஜாடிகளில் நச்சுப்பொருள் கவந்திருப்பதாகவும், அதை சொல்ல வேண்டுமானால், 15 மில்லியன் பவுண்டுகள் தரவேண்டும் என்றும் மிரட்டல் கடிதம் பறந்தது.

இதுபற்றி அந்த நிறுவனங்கள் அளித்த புகாரின் பேரில் இரவு பகலாக தூக்கமின்றி கடைகளில் உள்ள சிசிடிவி கேமெராக்களை ஆராய்ந்த போலீஸார் Lockerbie-லுள்ள Tesco பல்பொருள் அங்காடி ஒன்றில், ஒரு நபர் சில பாட்டில்களில் உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள செல்ஃப் ஒன்றில் வைப்பது பதிவாகியுள்ளது.

chid-food-Thief

அதில் Nigel Wright என்னும் விவசாயி என்பதும், அவர்தான் உணவுப்பொருட்களில் உலோகத்துகள்களைக் கலந்ததும், பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததும் நிரூபணமானது. இதனை அடுத்து ரகசிய போலீசார் ஒருவர் 100,000 பவுண்டுகள் கிரிப்டோகரன்சியை அளிப்பதாக கூறி Nigel wright சந்தித்தபோது ரகசிய போலீஸ் வலையில் சிக்கினார்.

ஆதாரங்களுடன் Nigel Wright கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.