IMG 20230228 WA0031 - 2026

நாமக்கல் -நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஜவர் பலி..

சற்றுமுன்
IMG 20230228 WA0031 - 2026

நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கன்டெனர் லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பெண்கள் சம்பவம் நடந்த இடத்திலும் ஒரு பெண் மருத்துவமனையில் பலியானார்கள். படுகாயமடைந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மோர்பாளையம் பகுதியைச் சேர்‌ந்தவர்கள் ஓட்டுநர்,குழந்தை உட்பட 7 பேர்கள் கரூர் மாவட்டம், வீரப்பூர் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் திருச்செங்கோடு செல்வதற்காக காரில் வந்துள்ளனர்.

கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்த போது முன்னாள் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியுள்ளது.

விபத்தில் நான்கு பெண்கள் நிகழ்விடத்திலேயே பலியானார்கள் அடையாளம் தெரிந்தது.
கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் திருச்செங்கோடு மோர்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி, கந்தாயி, குஞ்சம்மாள், கவிதா ஆகிய நான்கு பெண்கள் நிகழ்விடத்திலும், சாந்தி,காரை ஓட்டி வந்த ரவி மற்றும் 4 வயது குழந்தை லஷ்சனா ஆகிய மூன்று பேர்களும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும் குழந்தை லஷ்சனா ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.