போனியின் வேகத்தோடு போட்டியிட்ட தல தோனி! வைரல்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை விளையாட்டு
dhoni
dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதையடுத்து தற்போது ராஞ்சியில் உள்ள அவரது பன்னை வீட்டில் குடுப்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழித்து வருகிறார்.

தோனி குறித்து அவருடைய மனைவி சாக்‌ஷி இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கும் வீடியோ தோனியின் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.

poni
poni

அந்த வீடியோவில் மகேந்திர சிங் தோனி அவர் வளர்த்து வரும் குதிரையான ‘போனி’ உடன் அவரது பன்னை வீட்டில் உற்சாகமாக ஓட்டப்பந்தயம் வைத்து அதற்கு ஈடாக ஓடுகிறார்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ‘வலிமை, வேகம், விளையாட்டு நேரம், பந்தயம்’ என தலைப்பிட்டு சாக்‌ஷி தோனி பகிர்ந்துள்ள நிலையில் அதனை தோனி ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்ற்னார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

dhoni2
dhoni2

இதனிடையே சாக்‌ஷி பகிர்ந்துள்ள தோனியின் வீடியோவுக்கு ஃபயர் சிம்பல் போட்டு இன்ஸ்டாவில் கமெண்ட் செய்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா.

பொதுவாக விக்கெட் கீப்பிங்கில் அசத்தும் தோனி, விக்கெட்களுக்கு இடையே மின்னல் வேகத்தில் ஓடுவதில் மிகவும் திறமைசாலி. வயது கூடினாலும் அவருடைய இந்த வேகம் மட்டும் குறையவில்லை என்பதை பல நேரங்களில் நிரூபித்திருக்கிறார்.

dhoni 1
dhoni 1

முன்னதாக ரெய்னா, ஹர்திக் பாண்டியா, டுவைன் பிராவோ உள்ளிட்ட பலருடனும் போட்டிகளுக்கு பின்னர் ஓட்டப்பந்தயம் ஓடி ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார் தோனி.

விராட் கோலியும் கூட பல முறை தோனியின் மின்னல் வேக ஓடும் திறன் குறித்து வியந்து பாராட்டியிருக்கிறார்.

dhoni 4
dhoni 4

ஒரு முறை போட்டியின் போது தோனி – கோலி பார்னர்ஷிப்பின் போது விக்கெட்களுக்கு இடையே ஓடும்போது எனக்கு தோனி ஃபிட்னஸ் டெஸ்ட் வைத்ததை போல உணர்ந்ததாக கோலி தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.