தூக்கக் கலக்கம்… புளியமரத்தில் காரை விட்டதில்… பெண் உயிரிழப்பு; 7 பேர் படுகாயம்!

சற்றுமுன் மதுரை

car accident - 2026

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தூக்கக் கலக்கத்தில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் , புளியமரத்தின் மீது மோதியதில் பெண் ஒருவர்  உயிரிழந்தார். 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

துக்க வீடு ஒன்றுக்குச் சென்றுவிட்டு திருப்பூரிலிருந்து சிலர் சிவகிரிக்கு காரில்  திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த கார், கிருஷ்ணன்கோயில் அருகே வந்தபோது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர புளியமரத்தின் மீது மோதியது.  இதில் கார் முழுவதும் சேதமடைந்தது.

இந்நிலையில் அந்த காரில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

பலத்த காயமடைந்த 7 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர்  கூறிய போது, ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்ததாகக் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.