சென்னை: சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் சிகிச்சையில் உள்ள திமுக., தலைவர் கருணாநிதி குறித்து நலம் விசாரிக்க நேற்று சென்னைக்கு வந்திருந்தார் நிதின் கட்கரி.
சென்னை அடையாறு தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை இன்று காலை முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசினார். சேலம்
8 வழிச் சாலை உள்ளிட்ட சாலை திட்டப் பணிகள் குறித்து நிதின் கட்கரியுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.




