திருச்சி: #திருச்சி விமான நிலையத்தில் 3-வது நாளாக சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கக் கடத்தல்காரர்களுக்கு உதவியதாக சுங்க அதிகாரிகள் உள்பட 19 பேர் நேற்று கைது செய்யப் பட்டுள்ளனர்.
19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சிபிஐ அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். விமான நிலையத்தில் மேலும் 3 பயணிகளிடம் சி.பி.ஐ அதிகாரிகளின்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலேசியாவில் இருந்து நேற்று திருச்சி வந்த 3 பயணிகளிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
முன்னதாக, நேற்று #திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் உள்பட 19 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் சிபிஐ அதிகாரிகள். #Trichy #TrichyAirport
#திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசலு, கண்காணிப்பாளர்கள் ராமகிருஷ்ணன், மூர்த்தி, எட்வர்ட், அனீஸ்பாத்திமா, சுங்கத்துறை ஆய்வாளர் பிரசாந்த் உள்ளிட்ட அதிகாரிகள் கைது செய்யப் பட்டனர். #Trichy




