காஷ்மீர் குறித்து… பிரதமர் மோடி… நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை…!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

modi speech - 2026

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி மூலம் தேசத்தின் மக்களிடம் உரையாற்றுகிறார்.

அரசியலமைப்பின் 370 வது பிரிவையும், அரசியலமைப்பின் 35 ஏ பிரிவையும் ரத்து செய்வதற்கான வரலாற்று முடிவிற்குப் பின்னர் பிரதமர் மோடி பொதுமக்களுடன் பேசுகிறார். இந்த இரண்டு பிரிவுகளும்,  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு ஒரு சிறப்பு அந்தஸ்தைக் கொடுத்து, அதை நாட்டிலிருந்து அந்நியப்படுத்தியிருந்தன.

1956 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரின் உத்தரவால் அறிமுகப்படுத்தப் பட்ட பிரிவு 35 ஏ, ஆகஸ்ட் 5 ஆம் தேதி தற்போதைய குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் ரத்து செய்யப்பட்டது!

பிரதமரின் உரை, பெரும்பாலான செய்தி சேனல்களால் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது! கீழே  நேரடி ஸ்ட்ரீமிலும் பார்க்கலாம்.

காஷ்மீரில் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது, காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துக்கள் – பிரதமர்.

காஷ்மீரில் எந்த வன்முறையும் இல்லை, அமைதி நிலவுகிறது

மத்தியில் உருவாக்கப்படும் சட்டம், நாடு முழுவதும் பலன் தர வேண்டும்

ஆனால் இதுவரை காஷ்மீர் பகுதிக்கு அந்த பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை

காஷ்மீரில் இருந்த சட்டங்கள் வெறும் காகித அளவிலேயே இருந்தன

370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு போர்மேகம் மூளாது, அமைதி உருவாகும்

காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை

காஷ்மீர் ஊழியர்களுக்கு மற்ற மாநிலத்தில் உள்ளதை போல சலுகைகள் இனி கிடைக்கும்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக உருவாக்கப்படும்

காஷ்மீர் மற்றும் லடாக் உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப்படும்.

இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமா படப்பிடிப்புகளை காஷ்மீரில் இனி நடத்தலாம்

3 மாதங்களுக்குள் ஜம்மு காஷ்மீரில் நிர்வாகம் சீராகும்; யூனியன் பிரதேசம் என்பது தற்காலிக ஏற்பாடு தான்.

காஷ்மீரில் முதலீட்டை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம்

காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் பெயரிலான நிதி உதவி திட்டங்கள் அமலாகும்

காஷ்மீரில் ஆய்வு செய்து அரசு ஊழியர்கள், போலீசாருக்கான சலுகைகளை உறுதி செய்வோம்

விமான நிலையம் உருவாக்கம், தரமான சாலை வசதி உள்ளிட்டவை அடுத்தடுத்து தரப்படும்

பிரிவினைவாதிகளை ஜம்மு காஷ்மீர் மக்கள் நிராகரிப்பார்கள் என நம்புகிறேன்

கடந்த 3 மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் தான் மின்சாரம் வழங்கப்பட்டது

இனி 370 ரத்து செய்யப்பட்டுள்ளதால் மேலும் பல திட்டங்கள் அமலாகும்.

ஜம்மு காஷ்மீரில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ சென்டர்கள் உருவாகும்

காஷ்மீர் சால்வை, மூலிகை மருந்து போன்றவற்றை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த முடியும்

அந்த மூலிகைகளின் பயன்களை உலகமே அனுபவிக்கச் செய்வோம்

யூனியன் பிரதேசமானதும் லடாக்கை முன்னேற்றுவது மத்திய அரசின் பொறுப்பு, மிக விரைவாக லடாக்கில் வளர்ச்சி ஏற்படும்

சூரிய மின் உற்பத்தியில் லடாக் தலைசிறந்த பகுதியாக மாறும்

ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களுக்கு துணையாக 130 கோடி மக்களும் இருக்கிறார்கள்

சிறிது சிறிதாக ஜம்மு காஷ்மீரில் சகஜ நிலை திரும்பும்

ராணுவம் மற்றும் காவல்துறையின் பணிகள் பாராட்டும்படியாக உள்ளது

இன்றைய சூழலை அங்குள்ள மக்களும் ஏற்றுக்கொண்டு மாறி வருகிறார்கள்

ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமையை நாம் யாரும் பறிக்கக் கூடாது

காஷ்மீர் இளைஞர்கள் இந்தியாவின் பெயரை சர்வதேச அரங்கில் உயர்த்துவார்கள், இந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.